கிரிக்கெட் பார்க்க டிவி கேட்கும் கைதி
சென்னை:உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து ரசிக்க, தனது சிறை அறையில், சொந்தச் செல்வில் செட் டாப் பாக்ஸ் வசதியுடன், டி.வி.வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி, வழக்குப் போட்டுள்ளார்.
சென்னை புழல் மத்திய சிறையில் அப்துல் ரகீம் என்ற கைதி அடைக்கப்பட்டுள்ளார். 1993ம் ஆண்டு சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்தகுண்டுவெடிப்புச் சம்பவத்தில் இவர் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் 2வது தடா நீதிமன்றத்தில் அப்துல் கரீம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் மார்ச் 13ம் தேதி முதல் உலகக் கோப்பைக் கிரிக்கெட்போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டிகளை நான் பார்த்து ரசிக்க விரும்புகிறேன்.
கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனல் சிறையில் உள்ள டிவியில் தெரிவதில்லை. எனவே எனது சொந்தச் செலவில் டிடிஎச்வசதியுடன், எனது அறையில் டிவி வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதுதொடர்பாக சிறை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், புழல் மத்திய சிறையில், கைதிகளுக்கு தொலைக்காட்சி வசதி செய்துதரப்பட்டுள்ளது. இதில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் தெரியும். தூர்தர்ஷன் சேனலிலேயே உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்புசெய்யப்படுகின்றன.
சிறைக்குள் செட் டாப் வசதியை ஏற்படுத்த விதிமுறைகளில் இடம் இல்லை. மேலும், கைதிகளுக்கும் வெளியுலகத்திற்குமான தொடர்பை முழுமையாகஅனுமதிக்க முடியாது. டிவி நிகழ்ச்சிகளை சென்சார் செய்து கைதிகளுக்கு காட்டுவது இயலாத காரியம். எனவே இந்த கோரிக்கையை ஏற்கக் கூடாதுஎன்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து வெள்ளிக்கிழமைக்கு மனு மீதான விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications