ராகிங் செய்த 7 நர்சிங் மாணவிகள் சஸ்பெண்ட்
கோவை:கோவையில் உள்ள அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளை ராகிங் செய்த சீனியர் மாணவிகள் 7 பேர் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.
கல்லூரிகளில் ராகிங்கில் அதிகம் ஈடுபடுவது மாணவர்கள்தான் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் ஆங்காங்கே பெண்களும், ஆண்களுக்கு சற்றும்சளைக்காமல் ராகிங்கில் ஈடுபடத்தான் செய்கின்றனர்.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சிக் கல்லூரி உள்ளது. இங்கு 450 மாணவிகள் படித்து வருகிறார்கள். கல்லூரிக்குஅருகிலேயே விடுதியும் உள்ளது.
விடுதியில் தங்கியிருந்த முதலாமாண்டு மாணவிகள் ஸ்ரீதேவி, திலகம், ரேணுகாதேவி ஆகியோரின் அறைக்குள், 2ம் ஆண்டு படிக்கும்மாணவிகளான சசிகலா, புளோரா, நந்தினி, உஷா, ஹேமா, எஸ்தர், ஜாஸ்மின் லினோ, கீதா ஆகியோர் புகுந்து அங்கிருந்த 3 மாணவிகளையும்ராகிங் செய்துள்ளனர்.
பாட்டுப் பாடுமாறும், ஆடுமாறும் இன்ன பிற செயல்களில் ஈடுபடுமாறும் கூறி ராகிங் செய்ததால் 3 மாணவிகளும் மனதளவில் கடுமையாகபாதிக்கப்பட்டனர்.
தங்களுக்கு நேர்ந்த அவமானம் குறித்து கல்லூரி முதல்வர் கலாநிதிதியிடம் அவர்கள் 3 பேரும் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து விசாரணை நடத்திய முதல்வர், 7 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேல் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications