சேலம் கோட்டத்திற்கு 8,700 ஊழியர்கள்
Subscribe to Oneindia Tamil
கோவை:சேலம் கோட்ட ரயில்வே அலுவலகத்திற்கு 8,700 ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.
கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் செயல்பட ஆரம்பித்துள்ளது. அதிகாரிகள்பொறுப்பேற்றுள்ளனர்.
சேலம் கோட்டத்திற்கு ரயில்வே பட்ஜெட்டில் ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் கோட்டத்திற்கு 8,700 ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.ஊழியர்கள் நியமனம் தொடங்கி விட்டது.
பாலக்காடு கோட்டத்திலிருந்து சேலம் கோட்டம் உருவாக்கப்படுவதால் பாலக்காடு கோட்டத்துக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்றார் வேலு.












Click it and Unblock the Notifications