யோபு சரவணன் கூட்டாளிக்கு அடி உதை
தக்கலை:கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பூதப்பாண்டியில், மோசடி பிஷப் யோபு சரவணனின் கூட்டாளியை, பணம் கொடுத்து ஏமாந்தகாண்டிராக்டர்கள் அடித்து உதைத்தனர்.
இலவச வீடுகட்டித் தருவதாக நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த யோபு சரவணன் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனது மோசடி செயலுக்கு யோபு சரவணன் பல ஏஜென்டுகளை நியமித்திருந்தார். இவர்கள் மூலம்தான் காண்டிராக்டர்களிடம் அவர் பண வசூலைநடத்தினார்.
யோபு கைது செய்யப்பட்டவுடன் இந்த ஏஜென்டுகள் தலைமறைவாகி விட்டனர். குமரி மாவட்டம் பூதப்பாண்டி, அருநல்லூரைச் சேர்ந்தசுவாமிநாதன் ராஜ் என்பவரும் இப்படிப்பட்ட ஏஜென்டுகளில் ஒருவர்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு யோபு சரவணனின் ஏஜெண்டாக இவர் செயல்பட்டு வந்தார். 400 பேரிடம்ரூ. 8 லட்சம் மோசடி செய்துள்ளார்.
ராஜிடம், நெல்லை, கள்ளிகுளத்தைச் சேர்ந்த விக்டர் என்பவர், 100 பேரிடம் ரூ.2 லட்சம் வசூல் செய்து கொடுத்துள்ளார். சுவாமிநாதன் ராஜிடம்பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் விக்டர், 9 பேருடன் சேர்ந்து சுவாமிநாதன் ராஜை கடத்திச் சென்றார். பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டு ஊருக்கு ஒதுக்கு புறமாகஅழைத்துச் சென்று சரமாரியாக தாக்கினர், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக சுவாமிநாதன்ராஜ் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications