கடலில் வந்த பொருள் வெடித்து மீனவர் காயம்
ராமநாதபுரம்:கடலில் மிதந்து வந்த மர்மப் பொருளை எடுத்துப் பார்த்த மீனவர் அது வெடித்ததில் பலத்த காயமடைந்தார். அவரது இரு கைகளும் சிதைந்து போய்விட்டன.
உச்சிப்புளி அருகே உள்ள தர்கா வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் கார்த்திக். இவர் அதே ஊரைச் சேர்ந்த குப்பாண்டி, முனீஸ்வரன், முருகன்ஆகியோரோடு நாட்டுப் படகில் பாம்பனிலிருந்து கடலுக்குள் சென்றார்.
அரியமான் என்ற கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் ஒருபொருள் மிதந்து வந்தது. சிவப்பு நிறத்தில் இருந்த அந்தப்பொருளைப் பார்த்த கார்த்திக் அதை எடுத்து திறக்க முயன்றார்.
அப்போது அந்தப் பொருள் பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதில் கார்த்திக் படுகாயமடைந்தார். இரு கைகளும் சேதமடைந்தன. விரல்கள்அனைத்தும் துண்டாகி விட்டன. இதுதவிர வயிறு, மார்பு, முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சக மீனவர்கள் கொண்டு சென்றனர். கடலில் மிதந்து வந்த மர்மப் பொருள் கன்னிவெடியாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications