போபர்ஸ்: ஜார்ஜ் பெர்னாண்டஸ் போடும் குண்டு
டெல்லி:வாஜ்பாய் அமைச்சரைவயில் நான் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது, போபர்ஸ் வழக்கு குறித்து கோப்புகளை பார்க்க வேண்டாம் எனவாஜ்பாய் என்னைக் கேட்டுக் கொண்டார் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், சமதாக் கட்சித் தலைவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ்கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருப்பதால் அவரது பேச்சு பாஜகவுக்கு பெரும் அதிருப்தியைக்கொடுத்துள்ளது.
இதுகுறித்து ஜார்ஜ் கூறுகையில், பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது, நான் பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன், போபர்ஸ் குறித்தகோப்புகளை திறக்கவே வேண்டாம் என்று என்னை வாஜ்பாய் கேட்டுக் கொண்டார்.
ஏன் அப்படிச் சொன்னார் என்று எனக்குத் தெரியாது. அவர் சொன்னபடியே நான் போபர்ஸ் குறித்துக் கவலைப்படவில்லை என்று கூறியுள்ளார்ஜார்ஜ்.
ஜார்ஜின் இந்த புகாரை பாஜக வன்மையாக மறுத்துள்ளது. இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக செய்தித் தொடர்பாளருமான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இந்த நேரத்தில் ஏன் இப்படி ஒரு புகாரை ஜார்ஜ் கூற வேண்டும் என்று தெரியவில்லை.
அவர் ஒரு மூத்த தலைவர், இத்தனை கால தாமதத்திற்குப் பின்னர் இப்படி ஒரு குற்றச்சாட்டை அவர் வைக்க வேண்டிய அவசியம் என்ன?உண்மையில், வாஜ்பாய் காலத்தில்தான் போபர்ஸ் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த வழக்கில் தேங்கிக் கிடந்த சட்டப்பூர்வமான பல நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன என்பதை ஜார்ஜ் பெர்னாண்டஸுக்குத் தெரிவிக்கவிரும்புகிறேன் என்றார் பிரசாத்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications