இன்சாட் விண்ணில் செலுத்துவது தள்ளிவைப்பு
பெங்களூர்:இந்திய தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் இன்சாட் 4பியை விண்ணில் செலுத்துவதை நாளை வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள் இன்சாட் 4பி விண்ணில் செலுத்தப்படுவதற்காக பிரான்ஸில் உள்ள கொரு விண்வெளிநிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.55 மணி முதல் 4.28க்குள் அதை ஏரியான் ராக்கெட் மூலம் செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இன்சாட் தவிரஇங்கிலாந்தின் உளவு செயற்கைக்கோளான ஸ்கைநெட் 52 செயற்கைக்கோளும் ஏவப்படுவதாக இருந்தது.
ஆனால் ராக்கெட்டை ஏவுவதற்கு 7 நிமிடங்களுக்கு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராக்கெட்டைசெலுத்துவது ஒத்திவைக்கப்பட்டது.
நாளை அதிகாலை ஏரியான் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே திட்டமிட்டபடி இன்று இன்சாட்டை விண்ணில் ஏவமுடியவில்லை.
இன்சாட் விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர் கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து விடும்என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications