பெரியாறு: புதுக் குழு அமைக்கும் கேரளா
திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகப்படுத்தினால் ஏற்படும் பாதக நிலைகள் குறித்து ஆராய 3 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றைகேரள அரசு அமைத்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை குறைக்கப்பட்ட 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால்அதைப் புறக்கணித்து விட்ட கேரள அரசு, அந்த உத்தரவை செல்லாததாக்கும் வகையில் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள முதல்வர்களிடையே டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதேபோலஇரு மாநில அமைச்சர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
பிரச்சினை தொடர்ந்து இழுபறியாக உள்ள நிலையில் புதிய நிபுணர் குழு ஒன்றை கேரள அரசு அமைத்துள்ளது. 112 வயதாகும் முல்லைப் பெரியாறுஅணையின் உயரத்தை உயர்த்தக் கூடாது, அப்படிச் செய்தால் கேரளாவுக்கு பாதகம் ஏற்படும் என்ற தனது கருத்தை வலியுறுத்திச் சொல்வதற்காகஇந்த புதிய நிபுணர் குழுவை கேரளா நியமித்துள்ளது.
இந்தக் குழுவில், கொல்கத்தாவில் உள்ள சமூக அறிவியல் ஆய்வு மையத்தின் மூத்த ஆய்வாளரும், பொருளாதார நிர்வாக ஆணையத்தின் துணைத்தலைவருமான டாக்டர் திருபாய் ஜோதி கோஷ், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் வன விலங்குகள் ஆய்வுத்துறை தலைவர் டாக்டர் யாஹ்யா,ஒரிசா மாநில முன்னாள் தலைமை வனக் காப்பாளர் சரோஜ் குமார் பட்நாயக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
விரைவில் இந்த குழு முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று அதுகுறித்து முழு ஆய்வில் ஈடுபடும். இந்த குழு தரும் ஆய்வு முடிவுகளைஅடிப்படையாக வைத்து தனது வாதத்தை மேலும் உறுதியாக சொல்ல கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று மத்திய நிர் ஆணையம் அறிக்கை கொடுத்துள்ளது. மேலும், இப்பகுதியல் பூகம்பம்ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் கபில் சிபலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தனது வாதத்திலிருந்து இறங்கி வர முன்வராத கேரள அரசு புதிதாக ஒரு நிபுணர் குழுவை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications