இலங்கை வெறிக்கு இதுவரை 123 பேர் பலி
சென்னை:இலங்கை கடற்படையினரின் வெறித் தாக்குதலில் சிக்கி இதுவரை 123 தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை 250க்கும்மேல் என்று மீனவர்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் இனப் பிரச்சினை தலை தூக்கத் தொடங்கியது முதல் தமிழர்கள் என்றாலே அவர்கள் விடுதலைப் புலிகள் அல்லது அவர்களைப்போன்ற பிற போராளிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற அபத்தமான கொள்கையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது இலங்கை அரசு.
தமிழர்களை எதிரிகளாக நினைத்துக் கொண்டு, தங்களது அன்றாட வாழக்கைக்காக உயிரைப் பணயம் வைத்து கடலில் மீன் பிடிக்கச் செல்லும்தமிழக மீனவர்களை சரமாரியாக தாக்கிக் கொன்று வருகிறது.
உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இப்படி ஒரு இனப் படுகொலை நடந்து கொண்டிருக்க முடியாது. அந்த அளவுக்கு தமிழர்களை தாக்கி அழிப்பதைவெறித்தனத்தோடு செய்து வருகிறது இலங்கை அரசு.
இலங்கை அரசின் இந்தப் போக்கை மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் கண்மூடிக் கிடக்கிறது. இந்தியா என்ற கூட்டமைப்பில் தமிழகமும் ஒன்று,தமிழர்களும், இந்தியர்களே என்ற உணர்வு, டெல்லியில் உள்ளவர்களிடம் இல்லாமல் போய் விட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு மத்தியஅரசு மகா மெளனம் காத்து வருகிறது.
கடந்த 1973ம் ஆண்டு முதல் தமிழக மீனவர்களைத் தாக்கி வருகிறது இலங்கை கடற்படை என்பது மிகவும் அதிர்ச்சிகரமான ஒரு தகவல். ஆனால்இத்தனை காலமாகியும் இந்திய அரசு, தமிழக மீனவர்களைக் காக்க உருப்படியான நடவடிக்கை எதையாவது எடுத்திருக்கிறதா என்று கேட்டால்இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது.
1973ம் ஆண்டு முதல் 2004 வரை மொத்தம் 123 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தமிழக மீன்வளத்துறையின் கணக்கு கூறுகிறது.ஆனால் இது மிக மிக குறைந்த எண்ணிக்கை, உண்மையில் 250க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்திருப்பதாக நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டைமாவட்ட மீனவர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஐந்து மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான படகுகள்,மீன் வலைகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் ஒரு பகுதியாக ஒரு காலத்தில் இருந்த கச்சத்தீவை இந்திய அரசு, இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததே இந்த அவலத்திற்குமுக்கியக் காரணம். கச்சத்தீவு பகுதியில்தான் மீன் வளம் நிறைய உள்ளது.
அப்படிப்பட்ட மிக முக்கியமான ஒரு பகுதியை, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்த ஒரு பகுதியை அப்படியே லட்டு போலஇலங்கைக்குத் தூக்கி கொடுத்து தமிழக மீனவர்களின் வாழ்க்கையில் இந்திய அரசு விளையாடி விட்டது.
கச்சத்தீவு பகுதிக்குப் போனால்தான் மீன் கிடைக்கும் என்பதால் வேறு வழியின்றி நமது மீனவர்களும் அங்கேயே போகிறார்கள், அநாவசியமாகஉயிரை விட்டு வருகிறார்கள்.
இந்தப் பிரச்சினைக்கு இந்திய அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதி முடிவு காண வேண்டும், தமிழக மீனவர்களை இந்தியமீனவர்களாகக் கருதி அவர்களின் வாழ்க்கைக்கு வழி காண வேண்டும். இல்லாவிட்டால் மீனவர்களின் கொந்தளிப்பை சமாளிக்க முடியாத நிலைஉருவாகக் கூடும் என்று மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications