ராமர் பாலம்தான் நாகையைக் காத்ததாம்!
டெல்லி:சுனாமி அலைகள் தமிழகத்தைத் தாக்கியபோது ராமர் பாலம்தான் நாகப்பட்டனம் மாவட்டம் முழுமையாக அழியாமல் காத்தது என்று ஆசியவளர்ச்சி வங்கியின் முன்னாள் ஆய்வாளர் கல்யாண ராமன் கூறியுள்ளார்.
ஆசிய வளர்ச்சி வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆய்வாளரான கல்யாணராமன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்திரிக்கையான ஆர்கனைசரில்ராமர் பாலர் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
அதில் கல்யாணராமன் கூறியிருப்பதாவது:
ராமர் பாலம் ராமாயான காலத்திற்குட்பட்டது. இந்தப் பகுதியில், சேது சமுத்திரம் திட்டத்திற்காக ராமர் பாலத்தை உடைப்பது பெரும் அழிவைக்கொண்டு வரும்.
கடந்த 2004ம் ஆண்டு ஆசிய நாடுகளை சுனாமி தாக்கியபோது தமிழகத்திலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கானோர் உயி>ழந்தனர்.
நாகை மாவட்டத்திலும் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இருப்பினும் நாகை மாவட்டம் முழுமையாக அழியாமல் காத்தது ராமர் பாலம்தான். நாகைமாவட்டத்தின் தெற்கு மற்றும் தென் மேற்கு பகுதியை தடுப்புச் சுவர் போல இருந்து காத்தது ராமர் பாலம்.
இந்தேனேசியாவின் பந்தா ஏஸ் பகுதியில் கிளம்பிய சுனாமி அலைகள், இலங்கையை சுற்றிலும் பரவி தமிழக கடற்கரைப் பகுதிகளைத் தாக்கியது.பின்னர் கேரளாவுக்கும் அந்த அலைகள் சென்று தாக்கின.
சுனாமி அலைகள் ராமர் பாலத்தை வந்தடைந்தபோது பாலத்தின் வலிமை காரணமாக அலைகளின் வேகம் தணிந்தது. இதனால் நாகைமாவட்டத்தின் தெற்கு மற்றும் தென் மேற்குப் பகுதிகள் பேரழிவிலிருந்து தப்பின.
ராமர் பாலம் உடைக்கப்பட்டால், கடல் நீர் முழுமையாக எழுந்து தனுஷ்கோடியைத் தாண்டி வரும் அபாயம் உள்ளது. மேலும் கேரள மற்றும்கொங்கன் பகுதிகளின் கடலோரப் பகுதிகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும்.
ராமர் பாலம் இல்லாத நிலையில், மீண்டும் ஒரு சுனாமி ஏற்பட்டால், கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்,உயிரிழப்பை கணக்கிடவே முடியாத அளவுக்கு அழிவு பயங்கரமாக இருக்கும் என்று கூறியுள்ளார் கல்யாணராமன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications