வகுப்பறையில் சிரித்தால் குற்றமா??
நாகர்கோவில்:வகுப்பறையில் சிரித்த மாணவர்களை பிரம்பால் சரமாரியாக அடித்த ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மாணவர்களை அடிக்கக் கூடாது, உடல் ரீதியாக துன்புறுத்தக் கூடாது என்று அரசு கூறுகிறது. இதுதொடர்பாக கடுமையான உத்தரவும்பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் வாத்தியார்களிடம் சிக்கி அடிபடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் வகுப்பறையில் சிரித்ததற்காக ஒரு மாணவனை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளார். அந்த ஆசிரியரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட சேரி வெள்ளாளர் தெருவில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 8ம் வகுப்பு படித்து வரும்மாணவர்கள் ஆறுமுகம், சத்தியநாராயணன்.
சம்பவத்தன்று கணித ஆசிரியர் மாலிக் முகம்மது பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஆறுமுகமும், சத்தியநாராயணனும் பாடத்தைக்கவனிக்காமல் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த ஆசிரியர் மாலிக் முகம்மது, இருவரையும் கூப்பிட்டு பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் இரு மாணவர்களுக்கும்லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
மாலையில் உடல் வலியுடன் இருவரும் அழுதபடியே வீடு திரும்பினர். வீட்டில் போய் ஆசிரி யர் அடித்தது குறித்துக் கூறியுள்ளனர். சட்டையைக்கழற்றிப் பார்த்த அவர்களின் பெற்றோர்கள், உடலில் ரத்தக் காயம் ஏற்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.
இதையடுத்து இருவரும் தனியார் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் மாலிக் முகம்மதுவைக் கைது செய்தனர்.
இந்த சம்பவம் வட சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள்வலியுறுத்தியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications