லோக்சபா-பாலுவை அடிக்க பாய்ந்த கம்யூனிஸ்ட்எம்பிக்கள்-திமுக எம்பிக்கள் பதில் தாக்குதல்
டெல்லி:தேசிய கடல்சார் பல்கலைக்கழகத்தை கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாற்றுவது தொடர்பான மத்தியஅரசின் முடிவைக் கண்டித்து லோக்சபாவில் இடது சாரி எம்.பிக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதுதொடர்பான மசோதாவை மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தாக்கல்செய்ய முயன்றபோது அதைப் பறித்து, பாலுவை தாக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த திமுகஎம்.பிக்களும், திமுக மத்திய அமைச்சர்களும் கம்யூனிஸ்ட் எம்.பிக்களுடன் கடும் மோதலில் ஈடுபட்டதால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய கப்பல்துறை சார்பில், தேசிய கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது. இது முதலில்கொல்கத்தாவில் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இது சென்னைக்கு மாற்றப்படுவதாகஅறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான முடிவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. இந் நிலையில்இதுதொடர்பான சட்ட மசோதாவை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார்.
ஆனால் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு கடல்சார் பல்கலைக்கழகத்தை மாற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்துமேற்கு வங்கத்தைச் சேர்ந்த இடதுசாரி எம்.பிக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
பாலு மசோதாவைத் தாக்கல் செய்யக் கூடாது என்று ஆவேசமாக கூறிய அவர்கள் திடீரென எழுந்து பாலுவைநோக்கி ஓடினர். அவரது கையில் இருந்த மசோதாவைப் பறித்து கிழிக்க முயன்றனர். சில எம்.பிக்கள்பாலுவைத் தாக்கவும் முயன்றனர்.
இதைப் பார்த்து கோபமடைந்த திமுக எம்.பிக்கள், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வேகமாக ஓடிவந்து கம்யூனிஸ்ட் எம்.பிக்களைப் பிடித்துத் தள்ளி விட்டனர். நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம்,அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் பாலுவுக்கு அரணாக அவரை சுற்றி நின்று கொண்டனர்.
கம்யூனிஸ்ட் எம்.பிக்களைத் தள்ளி விட்ட பழனிமாணிக்கம், அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.கம்யூனிஸ்ட் எம்.பிக்களைக் கண்டித்து திமுக எம்.பிக்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருவரைஒருவர் ஆவேசமாக தள்ளி விட்டனர். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உறுப்பினர்களை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் கம்யூனிஸ்ட்உறுப்பினர்கள் தொடர்ந்து பாலுவை முற்றுகையிட்டு வாக்குவாதம் புரிந்தனர்.
உறுப்பினர்கள் இருக்கைக்குத் திரும்ப வேண்டும் என சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கோரிக்கை விடுத்தும்மேற்கு வங்க உறுப்பினர்கள் கேட்பதாக தெரியவில்லை. இதையடுத்து அவையை ஒத்தி வைத்து விட்டுசோம்நாத் சாட்டர்ஜி வெளியேறினார்.
அமைச்சர் பாலுவை தாக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தரும் இடதுசாரி எம்.பிக்கள் முயன்றதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications