இந்தியா-இலங்கை கூட்டு ரோந்து: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:இலங்கை கடற்படை, கடலில் ரோந்து மற்றும் ஆய்வில் ஈடுபடும்போது இந்திய ராணுவத்தையும் உடன் ஈடுபடுத்த இலங்கை அரசுசம்மதித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக்கண்டித்து இன்று திமுக சார்பில் சென்னையில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் முடிவில் இலங்கை துணைத் தூதரக அலுவலகத்திற்கு அமைச்சர்கள் குழு சென்று அங்குள்ள தூதரிடம் மனு கொடுத்தது. அப்போதுஅமைச்சர்கள் குழுவிடம் இலங்கை தூதர் பேசுகையில், மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் அலுலகம் எங்களிடம்விசாரித்தது, தகவல் கோரியது.

இந்தத் தாக்குதல் சம்பவம் ஏற்புடையது அல்ல என்றும் இலங்கை தூதர் தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, இலங்கைகடற்படையினர் கடலில் ரோந்து மற்றும் ஆய்வில் ஈடுபடும்போது இந்திய ராணுவத்தையும் உடன் சேர்த்துக் கொள்ள இலங்கை அரசுசம்மதித்துள்ளதாகவும், அமைச்சர்கள் குழுவிடம் தூதர் தெரிவித்தார் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

பிரதமரிடம் திமுக கூட்டணி எம்.பிக்கள் மனு:

இதற்கிடையே, இலங்கை கடற்படையின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திமுக கூட்டணிக்கட்சிகளின் எம்.பிக்கள் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுத்தனர்.

அவர்களிடம், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார். இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராசாஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+