வேலைக்காரிக்கு வந்த காரை லவட்டிய இந்திய தம்பதி
துபாய்:வேலைக்காரப் பெண்ணின் பெயரில் விழுந்த லாட்டரிப் பரிசை (கார்) அவருக்கு தராமல் ஏமாற்றி விட்ட இந்திய தம்பதி மீது துபாய் நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது.
துபாயில் 2004ம் ஆண்டு நடந்த ஷாப்பிங் திருவிழாவில் கலந்து கொண்ட துபாய் வாழ் இந்தியத் தம்பதியான ஜே.எஸ் மற்றும் அவரது மனைவிஎப்.எஸ் (இப்படித்தான் துபாய் போலீஸார் அந்தத் தம்பதியின் பெயர்களைத் தெரிவித்துள்ளனர்) ஆகியோர் அங்கு லாட்டரிப் போட்டியில் கலந்துகொண்டனர்.
தங்களது வீட்டு வேலைக்காரப் பெண்ணின் பெயரில் 2400 ரூபாய்க்கு லாட்டரிச் சீட்டை அவர்கள் வாங்கினர். அந்த லாட்டரிச் சீட்டுக்கு ஒரு கார்பரிசாகக் கிடைத்தது.
இதுதொடர்பான தகவலை துபாய் ஷாப்பிங் திருவிழா நிர்வாகிகள் அந்த வேலைக்காரப் பெண்ணின் பெயருக்கு அனுப்பினர். மேலும்,அவருக்குரிய காரையும் இந்தியத் தம்பதியிடம் ஒப்படைத்தனர். இந்தக் காரின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ. 47 லட்சத்து 62 ஆயிரத்து 874 ஆகும்.
ஆனால் இந்தக் காரை வேலைக்காரப் பெண்ணிடம் இந்தியத் தம்பதி தராமல் தாங்களே வைத்துக் கொண்டனர். அதேசமயம், அந்தப் பெண்ணுக்குவெறும் 97 ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்தனர். பின்னர் அந்தப் பெண் துபாயிலிருந்து அவரது நாட்டுக்குப் போய் விட்டார்.
இந்த நிலையில் வேலைக்காரப் பெண்ணின் பெயரைப் பயன்படுத்தி லாட்டரிச் சீட்டு வாங்கி விட்டு, அதற்குரிய பரிசை அப்பெண்ணுக்குத் தராமல்ஏமாற்றி விட்டதாக இந்தியத் தம்பதி மீது துபாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வேலைக்காரப் பெண்ணுக்குரிய பரிசைத் தராமல் அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக இந்தியத் தம்பதி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இந்தியத் தம்பதிக்கு கடும் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்தியர் ஜே.எஸ் முதலீட்டாளராக உள்ளார். அவரது மனைவி ஒரு டாக்டர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications