பால் விலை உயர்வு: ஜெ கடும் கண்டனம்
சென்னை:திமுக அரசு ஒரு பக்கம் இலவச சலுகைகளை அறிவித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் உயர்த்திவருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆவின் நிறுவனம் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயக்கி வருவதால், பால் கொள்முதல் விலையை ரூ. 10.50ல் இருந்து ரூ. 12 ஆகஉயர்த்தி இருப்பதாகவும், இதன் விளைவாக விறபனை விலை லிட்டருக்கு ரூ. 12.50ல் இருந்து ரூ. 13.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழகஅரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் ரூ. 20 கோடி நஷ்டத்தில் இயங்குவது தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என திமுக அரசால் சொல்லப்படுகிறது. எனதுஆட்சியில் பெருவாரியான கிராம மக்கள் குறிப்பாக பெண்கள், விவாசயிகள், ஆதரவற்றோர் ஆகியோர் கறவை மாடுகளை வைத்து அது தரும்பாலை மேற்படி ஆவினுக்கு விற்பனை செய்து அதன் மூலம் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் என்பதை அறிந்து,
கிராமப் பொருளாதார மேம்பாட்டையும், கிராமப் புறத்தில் வாழும் தனி நபரின் வருமானத்தையும் உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்குடன்நான் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தி 2004ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி உத்தரவிட்டேன்.
ஆனால் நுகர்வோரின் நலன் கருதி பாலின் விற்பனை விலை எந்த அளவிலும் உயர்த்தப்படவில்லை. இதனால் உற்பத்தியாளர்களும்பயன்பெற்றார்கள், பொதுமக்களும் எவ்வித பாதிப்பும் அடையாமல் விலை ஏற்றத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டார்கள்.
தற்போது ஒரு பக்கம் இலவசங்கள், மறு பக்கம் விலை ஏற்றம் இந்த இரண்டுக்கும் இடையில் திமுக அரசிடம் மாட்டிக் கொண்டு மக்கள்படாதபாடுபடுகிறார்கள். பால் விலை ஏற்றத்தின் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
கொள்முதலுக்கான கூடுதல் விலையை அரசே ஏற்று கொண்டு, பால் விலை ஏற்றத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications