மதுரையை வரட்ட போகும் தண்ணீர்ப் பஞ்சம்
மதுரை:வைகை அணையின் நீர்மட்டம் படு மோசமாக இருப்பதால் மதுரை மாநகரில் பெரும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
வைகையிலிருந்து மதுரை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 28 அடிக்கும் குறைவாக உள்ளது. இந்த28 அடியில் 20 அடிக்கு வெறும் சேறும், சகதியும்தான் உள்ளது. 8 அடி தண்ணீரைக் கொண்டுதான் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யவேண்டியுள்ளது.
இதனால் நகருக்கு தடையின்றி நீர் வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரை நகரில் பெரும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் என்றஅச்சம் எழுந்துள்ளது.
கோடை காலம் வேறு நெருங்கி விட்டதால் மதுரை நகரின் குடிநீர்த் தேவையை சமாளிப்பது மிகவும் கடினம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.தலைநகர் சென்னையை கோடை காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் பேயாய் பிடித்து ஆட்டுவது போன்ற ஒரு நிலை மதுரைக்கு வந்து விடுமோ என்றுமதுரை மக்களும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
இப்போதே தண்ணீர்ப் பஞ்சம் தனது பல்லைக் காட்ட ஆரம்பித்து விட்டது. ஒரு குடம் குடிநீர் ஒரு ரூபாய்க்கு விற்க ஆரம்பித்துள்ளது. கோடைநெருங்க நெருங்க விலையும் ஏறும் என்று மக்கள் கூறுகிறார்கள்.
மதுரை மேற்குத் தொகுதியில் இடைத் தேர்தல் நெருங்கி வருவதால், குடிநீர்ப் பிரச்சினையை சமாளிக்க திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளைஎடுக்க ஆரம்பித்துள்ளது.
மதுரை நகர குடிநீர் தேவையை சமாளிக்க மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து மாநகராட்சி மேற்பார்வைப் பொறியாளர்சக்திவேல் கூறுகையில், வைகை 2வது குடிநீர்த் திட்டத்திற்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதைத் தேக்கி வைத்து மதுரை மக்களுக்குவிநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
இப்போதைக்கு குடிநீர்ப் பஞ்சம் இல்லை. எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார் அவர்.
ஆனால் சக்திவேல் சொல்வது போல பிரச்சினை இல்லாமல் இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். குடிநீருக்கு மட்டும் பிரச்சினை இல்லை,மே மாதம் நடைபெறவுள்ள சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் ஆற்றில் இறங்கக் கூட தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்படும் என்று மதுரைமக்கள் அஞ்சுகிறார்கள்.
கவலைப்படாதீகப்பு, ஆத்தா மீனாட்சி எப்படியும் காப்பாத்திருவா!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications