ரூ. 25 கோடியில் சென்னை கடற்கரை சீரமைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை நகரில் உள்ள கடற்கரைகள் ரூ. 25 கோடி செலவில் சீரமைத்து, அழகுபடுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சியில் தாக்கல்செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007-08ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் நேற்று மாமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதிக்குழுத் தலைவர் ராதா சம்பந்தன்பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்களை மேயர் மா.சுப்ரமணியன் வாசித்தார்.
இந்த பட்ஜெட் தாக்கலில் ஒரு விசேஷம் இருந்தது. 300 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க சென்னை மாநகராட்சியில் இதுவரை பெண் யாரும்பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததில்லை. .தல் .றையாக ராதா சம்பந்தன் அந்தப் பெருமையை நேற்று பெற்றார். இவர் மாநகராட்சிப் பள்ளியில்ஆரம்பப் பாடத்தைப் படித்தவர் என்பது கூடுதல் விசேஷம்.
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- சென்னையில் மெரீனா, எலியட்ஸ், தலைமைச் செயலக பகுதி கடற்கரையை சீர்படுத்தி, அழகுபடுத்த ரூ. 25 கோடி ஒதுக்கீடு.
- சென்னை நகரில் போக்குவரத்தை சீர்படுத்த தங்கசாலை சந்திப்பு, பேசின்பாலம் சந்திப்பு, லஸ் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிய
- மேம்பாலங்கள். பால கட்டுமானப் பணிக்கு ரூ. 40 கோடி ஒதுக்கீடு.
- சென்னை நகர சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ. 183 கோடி.
- 15 இடங்களில் எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய பிளாட்பார மேம்பாலங்கள்.
- மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டடத்தை சீரமைக்க ரூ. 18 கோடி.
- 350 பேருந்து நிறுத்தங்களில் அதி நவீன நிழற்குடைகள்.
- நகரின் 10 இடங்களில் உடற் பயிற்சி செய்ய நவீன ஜிம்கள்.
- மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச இருதய சிகிச்சைத் திட்டம்.
- தற்காலிகப் பணியில் உள்ள 195 இடுக்காட்டு ஊழியர்களுக்கு (வெட்டியான்கள்) பணி நிரந்தரம்.
- தெருவில் திரியும் நாய்களைப் பிடிக்க ரூ. 18 லட்சத்தில் புதிய வாகனங்கள்.
- மாநகராட்சி சார்பில் 3 இடங்களில் ரூ. 1.60 கோடி மதிப்பில் இறைச்சி வெட்டும் கூடங்கள்.
- முக்கிய சாலைகளில் ரூ. 1 கோடியில் 10 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் திட்டம் என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
- பட்ஜெட்டில் புதிதாக எந்த வரிவிதிப்பும் இல்லை.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications