கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்
கோவை:கோவை மாநகரில் ரூ. 25 முதல் 30 கோடியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தீர்மானித்துள்ளது.
தமிழகத்தின் தொழில்நகரம் கோவை. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. தொழில்துறையில் எப்போதோ முன்னுக்குப்போய் விட்ட கோவை இப்போது தகவல் தொழில்நுட்பத் துறையிலும் புரட்சி படைக்க புதுவீச்சுடன் கிளம்பியுள்ளது.
சென்னையைத் தொடர்ந்து கோவையில் பிரமாண்ட தகவல் தொழில்நுட்பப் பூங்கா உருவாகி வருகிறது. இந்தப் பின்னணியில், கோவையில்சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை உருவாக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தீர்மானித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது சென்னையில் மட்டுமே சகல வசதிகளுடனும் கூடிய சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. நாடு முழுவதும் 25மைதானங்கள் உள்ளன . இந்த வரிசையில் விரைவில் கோவையும் இணைகிறது.
கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதற்கான இடத்தை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் குழு பார்வையிட்டுள்ளது. அவிலா கான்வென்ட் அருகேஉள்ள கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான ஏழரை ஏக்கர் நிலம், எஸ்.என்.ஆர். மைதானத்தின் 6 ஏக்கர் நிலம் ஆகியவற்றை நிர்வாகிகள் குழுபார்வையிட்டுள்ளது.
இதில் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு ஸ்டேடியம் அமைக்கப்படவுள்ளது. விரைவில் இடம் எது என்பதை முடிவு செய்த பின்னர் கட்டுமானப்பணிகள் தொடங்கும் எனத் தெரிகிறது.
ரூ. 30 கோடி வரை இதற்காக செலவிட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தீர்மானித்துள்ளதாக சங்கத் துணைத் தலைவர் பிரபாகர் ராவ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications