ஸாரி, எனக்கு என் பொண்டாட்டியை பிடிக்கலை!
சென்னை:தனது மனைவிக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டது. எனவே அவர் எனக்குத் தேவையில்லை, அவரிடமிருந்து என்னை பிரித்து விடுங்கள் என்றுகூறி போலீஸில் கணவர் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை பாடி சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரராகவன். கொரட்டூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் யமுனா. இவர்களுக்கு வானகரத்தில் கடந்தஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி முறைப்படி திருமணம் நடைபெற்றது.
கல்யாணத்திற்குப் பிறகு யமுனா, வீரராகவனிடம் சரியாகப் பேசுவதில்லை. கடனுக்கு குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஆனால் மணிக்கணிக்கில்அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளார்.
இதனால் குழம்பிய வீரராகவன், என்ன ஏது என்று யமுனாவிடம் விசாரித்துள்ளார். ஆனால் யமுனா சரியாக பதில் சொல்லவில்லை. இந்தநிலையிலல் திடீரென யமுனா காணாமல் போய் விட்டார். அடுத்த நாள் தான் வீடு திரும்பினார்.
அவரிடம் எங்கே போயிருந்தாய் என்று வீரராகவனின் பெற்றோர் விசாரித்தபோது, எனக்கும், திருவள்ளூர் மாவட்டம் தொழூதரைச் சேர்ந்ததிணேஷ்குமார் என்பவருக்கும் 2006 ஜூன் மாதம் 7ம் தேதி பதிவுத் திருமணம் நடந்து விட்டது என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு தலையில் இடி விழுந்தது போலாகி விட்டது வீரராகவன் குடும்பத்துக்கு. இதைத் தொடர்ந்து விவாகரத்து கோரி வீரராகவன் குடும்பநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அதற்கு மாறாக யமுனா, வீரராகவன் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி போலீஸில் புகார் கொடுத்தார்.
இதைத் தெடார்ந்து இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வீரராகவன் வந்தார். ஆணையர் அலுவலகத்தில் அவர் கொடுத்தபுகாரில், எனது மனைவியின் முதல் கணவர் திணேஷ்குமார் என பெற்றோரையும், என்னையும் மிரட்டுகிறார்.
என்னைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே எனது மனைவிக்கு கல்யாணம் ஆகி விட்டது. எனவே அவருடன் வாழ நான்விரும்பவில்லை, அவரை எனக்குப் பிடிக்கவும் இல்லை. தயவு செய்து இருவரையும் பிரித்து வைத்து விடுங்கள் என்று கூறியிருந்தார் வீரராகவன்.
வழக்கமாக சேர்த்து வையுங்கள் என்று கேட்டுத்தான் புகார் வரும். ஆனால் மனைவியைப் பிடிக்கவில்லை, பிரித்து வையுங்கள் என்று கூறி வந்தபுகாரால் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications