குமரி காட்டில் கேரள திருடன் குண்டு வெடித்து பலி
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை காட்டில், கேரளாவைச் சேர்ந்த சந்தனக் கொள்ளையன் குண்டுவெடித்து பலியான சம்பவத்தால் பரபரப்புஏற்பட்டுள்ளது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள வீதுரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனில்குமார், கீரிப்பாறை சரக வன ரேஞ்சருக்குதொலைபேசி மூலம் ஒரு தகவல் கொடுத்தார்.
வீதுரையைச் சேர்ந்த சோமன் என்பவர் கீரிப்பாறை காட்டில் குண்டுவெடித்துப் பலியாகி விட்டதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து நாகப்பன்தலைமையில், வனத்துறையினர் காட்டுக்குள் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதில் காளிகேசம் என்ற இடத்திற்கு அருகே தோட்டாணி என்ற இடத்தில் சோமனின் உடல் அழுகிய நிலையில் சிதைந்து காணப்பட்டது. கீரிப்பாறைபோலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
சோமனின் உடல் அருகே வெடிகுண்டுச் சிதறல்கள், மரம் வெட்டப் பயன்படும் கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களும் கிடந்தன. சோமனும், அவரதுஆட்களும் கடந்த 9ம் தேதி நாட்டு வெடிகுண்டுகளுடன் இப்பகுதிக்கு வந்துள்ளனர். சந்தன மரத்தை வெட்டிக் கடத்த அவர்கள் வந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்து சோமன் பலியாகி விட்டார். அவருடன் வந்தவர்கள் உடலை துணியில் கட்டி எடுத்துச் செல்லமுயன்றனர். ஆனால் வனக் காவலர்கள் ரோந்து வந்ததைப் பார்த்து விட்டு உடலை அப்படியே போட்டு விட்டு தப்பி விட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications