பாலுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் ஜெ.-அமைச்சர்
சென்னை:திமுக அரசு பால் விலையை உயர்த்தி விட்டதாக கூறி நீலீக் கண்ணீர் வடிக்கும் ஜெயலலிதா, அவரது ஆட்சிக்காலத்தில் இஷ்டத்திற்கு பால் விலையைஉயர்த்தியதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று மாநில பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்ற சற்றே பால் விலையை உயர்த்தியுள்ளது தமிழக அரசு. ஆனால் இதை பெரிதுபடுத்தி, தினசரிபொய மூட்டைகளை அவிழ்த்து மக்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏமாற்றி வருகிறார்.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது பாலின் விலையை எப்படியெல்லாம் ஏற்றினார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்வதன் மூலம் அந்தஅம்மையார் வடிப்பது நீலிக் கண்ணீர் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்வார்கள்.
1991 முதல் 1996 வரை ஆட்சியில் இருந்த அதிமுக அரசு மக்களுக்கு விற்பனை செய்யும் பாலின் விலையை லிட்டருக்கு ரூ. 5லிருந்து ரூ. 8க்குஉயர்த்தியது. இதன் மூலம் பாலின் விலை கூடுதலாக லிட்டருக்கு ரூ. 3 அதிகரித்தது.
1996ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1998, ஏப்ரல் 7 முதல் பால் கொள்முதல் விலையில் ரூ. 1.50 உயர்த்தி பாலின் விற்பனை விலையை 1 ரூபாய்மட்டும் உயர்த்தியது.
2001 முதல் 2006 வரை ஆட்சியில் இருந்த அதிமுக அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 50 காசு உயர்த்தி மக்களுக்கு வழங்கும் பாலின்விற்பனை விலையை 2 ரூபாய் கூடுதலாக்கியது.
2004ல் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் பால் கொள்முதல் விலையை மட்டும் லிட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தி விட்டு,சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு விற்பனை விலையை உயர்த்தவில்லை.
தற்போது திமுக அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 1.50 என உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில் விற்பனை விலையை, மக்களுக்குபாதிப்பு ஏற்படாத வகையில், ரூ. 1.25 என உயர்த்தியுள்ளது.
இப்படி நினைத்தபோதெல்லாம் பால் விலையை உயர்த்தி மக்களை ஏமாற்றிய ஜெயலலிதாவின் கபட நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்,இனியும் ஏமாற மாட்டார்கள் என்று கூறியுள்ளார் மதிவாணன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications