படையெடுத்து கச்சத்தீவை மீட்க வேண்டும்-திருமா
கடலூர்:இலங்கையிடம் நாம் இழந்த கச்சத்தீவை படையெடுத்துச் சென்று மீட்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில்தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில், தமிழக மீனவர்கள் என்று தெரிந்து கொண்டு தான் இலங்கைகடற்படை தாக்குதல் நடத்துகிறது, துப்பாக்கியால் சுடுகிறது.
இந்த விவகாரத்தில் இந்தியாவை, இலங்கை அரசு மதிக்கவே மாட்டேன் என்கிறது. இந்தியாவைக் கண்டு அது பயப்படவே இல்லை.
விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, இந்திய கடற்படையுடன் இணைந்து, கடல் எல்லையில் ரோந்து செல்ல இலங்கை அரசுவிரும்புகிறது. இதற்காகவே தமிழக மீனவர்களை சுட்டு, கூட்டு ரோந்துக்கு இந்தியாவைப் பணிய வைக்க அது நாடகமாடுகிறது.
தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் இந்திய அரசு அமைதி காத்து வருகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரியது.
இலங்கை மீது படையெடுக்க வேண்டும், கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைக்க வேண்டும். அதுவரை இலங்கையை அடக்க முடியாது.
1974ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து திமுக நடத்திய போராட்டம் ஆறுதல் தருகிறது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், தமிழகஎம்.பிக்கள் குடியரசுத் தலைவர், பிரதமரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும்என்றார் திருமாவளவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications