அடங்கா 63: தற்கொலைக்கு முயன்ற 20
சென்னை:63 வயதாகும் வீடியோ கடை முதலாளியின் செக்ஸ் லீலைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்தக் கடையில் வேலை பார்த்து வரும் 20வயதுப் பெண் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து முதலாளியை போலீஸார் கைது செய்து சிறையில் தள்ளினர்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் வினோத் குமார். இவருக்கும் மல்லிகா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்குமுன்பு கல்யாணம் நடந்தது.
20 வயதாகும் மல்லிகா குடும்ப வருமானம் போதவில்லை என்பதால் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள சிவராமன் (63) என்பவரது வீடியோகடையில் வேலை பார்த்து வருகிறார். மாதம் ரூ. 3,000 சம்பளம் கொடுத்து வருகிறார் சிவராமன்.
சிவராமனுக்கு கல்யாண வயதில் குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் செக்ஸ் குறும்பு மிக்கவராம் (வைத்திருப்பது வீடியோ கடை ஆச்சே!). தினசரிமல்லிகாவிடம் தனது செக்ஸ் குறும்பைக் காட்டி வந்துள்ளார். ஆரம்பத்தில் லேசு பாசாக ஆரம்பித்தவர் போகப் போக எல்லை மீறத்தொடங்கியுள்ளார்.
மல்லிகா கடையைப் பெருக்கும்போது பின்னால் வந்து நிற்பது, பின்பக்கத்தைத் தட்டுவது, கன்னத்தைக் கிள்ளுவது என சில்மிஷங்களில் ஈடுபட்டுவந்துள்ளார். இத்தனைக்கும் சிவராமனை மல்லிகா அப்பா என்றுதான் மரியாதையாக அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடையில் வாடிக்கையாளர் யாரும் இல்லாத நேரத்தில் டிவியில் ஆபாச சிடியைப் போட்டு விடுவாராம் சிவராமன். அதைப்பார்க்குமாறு மல்லிகாவையும் வற்புறுத்துவார். அதில் வரும் உடலுறவுக் காட்சிகளைக் காட்டி, இப்படித்தான் உனது வீட்டுக்காரரும் செய்வாரா,செய்யாவிட்டால் சொல், நான் அப்படி செய்கிறேன் என்று கூறி நாக்கில் நரம்பே இல்லாமல் வரம்பு மீறிப் பேசுவாராம்.
இவரது செக்ஸ் சில்மிஷங்களும், ஆபாச செய்ககைளும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் குடும்ப நிலை கருதி பொறுத்துப் பார்த்துள்ளார்மல்லிகா. ஆனால் கடந்த வாரம் சிவராமன் படு மோசமாக நடந்து கொண்டாராம்.
சுவரில் இருந்த கடிகாரத்தில் நேரத்தை சரியாக வை என்று கூறியுள்ளார் சிவராமன். மல்லிகாவும் ஒரு ஸ்டூல் மீது ஏறி நின்று கடிகாரத்தை சரிசெய்துள்ளார். அப்போது பின்பக்கமாக வந்த சிவராமன், மல்லிகாவைக் கட்டிப் பிடித்து மானபங்கப்படுத்த முயன்றுள்ளார்.
பயந்து அலறிய மல்லிகாவிடம், இதை வெளியில் சொல்லாதே, நான் சொல்வதைக் கேட்டால் மாதம் 5,000 ரூபாய் தருகிறேன் என்று கூறியுள்ளார்சிவராமன்.
ஆனால் இதை ஏற்க மறுத்து விட்ட மல்லிகா அன்று வீடு திரும்பியவுடன் எலிக்கு வைக்கும் விஷத்தை சாப்பிட்டு விட்டார். உடனடியாககீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கு டாக்டரிடம் நடந்தது குறித்து மேற்கண்டவாறு வாக்குமூலமாககூறினார் மல்லிகா.
அந்த வாக்குமூலத்தையே புகாராக ஏற்றப் போலீஸார், காமவெறி பிடித்த சிவராமனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications