நதிகள் இணைப்பு-தஞ்சையில் பாஜக ஆர்ப்பாட்டம்
சென்னை:தென்ன நதிகளை இணைக்கக் கோரி தஞ்சாவூரில் ஏப்ரல் 2ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாபெரும்ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சித் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில்தமிழகத்தின் நலன் கவனத்தில் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகளுமே பல்வேறுகுறைபாடுகளை சுட்டிக் காட்டியுள்ளன. இந்த பாதக அம்சங்களை நடுவர் மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்று நிவாரணம் காண மறு ஆய்வு மனு தாக்கல் செய்யலாம் என்ற முடிவும் எட்டப்பட்டுள்ளது. இதுதற்காலிகத் தீர்வாகவே அமையும்.
நதிகளை இணைப்பதுதான் இதுபோன்ற பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமைய முடியும். தென்னக நதிகளைஇணைப்பது குறித்து கடந்த வாஜ்பாய் ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்த காங்கிரஸ்கூட்டணி அரசு இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது.
முதல்வர் கருணாநிதி தற்போது தென்னக நதிகளை இணைக்க ஆதரவு காட்டியுள்ளார், ஆதரவாகப் பேசிவருகிறார். திமுக தற்போது மத்திய அமைச்சரவையிலும், கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளது. இதைப்பயன்படுத்தி தென்னக நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு உயிர் கொடுக்க உதவ வேண்டும்.
தென்னக நதிகளை இணைக்கக் கோரி ஏப்ரல் 2ம் தேதி தஞ்சையில் எனது தலைமையில் மாபெரும்ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தில் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளும் பெரும் திரளாககலந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார் கணேசன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications