சீரழிஞ்சு போச்சு ஆவின்: ஜெ. மீண்டும் புகார்
சென்னை:ஆவின் பால் விலையை மக்கள் தலை சுமையை ஏற்றி, ஆவின் நிர்வாகத்தை சீரழித்து விட்டது திமுக அரசு என்றுஅதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆவின் பால் விலை ஏற்றத்திற்கு சரியான காரணத்தை சொல்லாமல், அதிமுக ஆட்சியில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பால் விலை உயர்த்தப்பட்டது என்று முதல்வர் கருணாநிதியும், பால் வளத்துறை அமைச்சரும்கூறுவதுகண்டனத்திற்கு உரியதாகும்.
2001ம் ஆண்டு நான் பதவியேற்ற போது, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும்மாவட்டபால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் பெருத்த நஷ்டத்தில் இயங்கி வந்ததன. மேலும் சங்கங்கள்செலுத்தவேண்டிய நிலுவை தொகை ரூ. 35 கோடியாக இருந்தது.
இதன் காரணமாக ஆவின் நிர்வாகம் இழுத்து மூடுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டது. மேலும் திமுக அரசு கடனாககொடுத்தரூ.26 கோடியை எனது ஆட்சியில் மானியமாக கொடுத்து, அதற்கான வட்டித் தொகையையும் தள்ளுபடிசெய்தேன்.
பிறகு பால் உற்பத்தியாளர்கள் தர வேண்டிய நிலுவைத்தொகை முழுவதும் பட்டுவாடா செய்யப்பட்டு ஆவின்அமைப்பு லாபத்தில் செயல்படத் தொடங்கியது.
2003-04ம் ஆண்டில் 17 பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களில் 15 லாபத்தில் செயல்பட்டன. அவர்களுக்கு 10நாட்களுக்கு ஒருமுறை நிலுவையின்றி பால் கொடுத்ததற்கான பணம் வழங்கப்பட்டதோடுஉற்பத்தியாளர்களுக்குநிலுவைத்தொகை பாக்கியும் இல்லை.
ஆனால் இப்போது திமுக ஆட்சியில் பால் உற்பத்தியாளர்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை அதிகரித்துக்கொண்டேஇருக்கிறது. இது தவிர பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், சிலவற்றில் தட்டுபாடுகள்இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
எனது ஆட்சியில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.1 என உயர்த்தினேன். ஆனால் பால் விற்பனைவிலையைஉயர்த்தவில்லை.
இவ்வாறு எனது ஆட்சியில் சீர் செய்யப்பட்ட ஆவின் நிர்வாகத்தை 9 மாதங்களில் சீரழித்ததோடு
மட்டுமில்லாமல்தற்போது பால் விற்பனை விலையையும் திமுக அரசு ஏற்றியுள்ளது, மிகவும் கண்டித்தக்கது.
எனவே நுகர்வோர் மீது சுமத்தப்பட்ட விலை ஏற்ற சுமையை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்ஜெயலலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications