காவிரி: பிரதமரிடம் கர்நாடக எம்.பிக்கள் மனு
டெல்லி:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிடக் கூடாது என்று கோரி கர்நாடக மாநிலஎம்.பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடக் கூடாது என்று கர்நாடகம் கோரி வருகிறது. கெஜட்டில்வெளியிட்டு விடாமல் தடுக்க பல்வேறு வகையான நடவடிக்கையில் கர்நாடக எம்.பிக்களும், அரசியல்தலைவர்களும் படு மும்முரமாக உள்ளனர்.
இதுதவிர லோக்சபாவிலும் காவிரிப் பிரச்சினை தொடர்பாக விரிவான விவாதத்தை நடத்தி விட கெளடாதலைமையில் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். கெளடாவும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்திப் பார்த்தார்.
இந்த நிலையில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை கர்நாடக எம்.பிக்கள் கூட்டாக சேர்ந்து சந்தித்தனர்.கெளடா தலைமையில் சென்ற இக்குழுவில் கர்நாடக மாநில அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களும்கலந்து கொண்டனர்.
பாஜக எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்தகுமார், ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான்கான்,மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், பாஜக தலைவர் வெங்கையா நாயுடு (இவர் கர்நாடகமாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி. ஆனவர், பெங்களூரில் ஒரு மாதிரி பேசுவார், சென்னையில் வேறு மாதிரிபேசுவார்!),
உள்ளிட்ட 27 பேர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, காவிரி நடுவர் மன்றம் மீது18 புகார்களைக் கூறி ஒரு மனுவைக் கொடுத்தனர். தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக உள்ளது.
கேரளாவுக்கு வழங்கப்படும் 40 டிஎம்சி தண்ணீரும் கூட தமிழகத்திற்கே செல்லும் என்பது உள்பட பல்வேறுபுகார்களை கர்நாடக எம்.பிக்கள் அடுக்கியிருந்தனர்.
இந்தப் பிரச்சினையில் உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டும். சுமூகத் தீர்வு காணப்படும் வரை இறுதித்தீரப்பை கெஜட்டில் வெளியிடக் கூடாது என்று கோரப்பட்டிருந்தது.
மனுவை வாங்கிக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications