இந்திய-இலங்கை ரோந்து: கருணாநிதி விளக்கம்
சென்னை:இந்திய, இலங்கை கடற்படைகள் கூட்டு ரோந்து செல்வதற்கு நான் ஒப்புதல் தந்து விட்டதாக கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை என்று முதல்வர்கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களைத் தடுக்க இலங்கை கடற்படையும், இந்திய கடற்படையும் பாக் ஜலசந்தியில் கூட்டு ரோந்துமேற்கொள்ளலாம் என இலங்கை அரசு யோசனை தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் இதுதொடர்பாக கோரிக்கை மனு கொடுக்கச் சென்ற தமிழக அமைச்சர்கள் குழுவிடமும் இதுதெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதி, இரு நாட்டு கடற்படையும் கூட்டு ரோந்து செல்ல முடிவெடுத்துள்ளன. இது வரவேற்புக்குரியதுஎன்று கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகின.
ஆனால் அதற்கு கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கையில், சர்வதேச கடல்எல்லையில், இந்திய, இலங்கை கடற்படையினர் கூட்டாக ரோந்து செல்வது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது, ஒப்புதல் தர வேண்டியதுமத்திய அரசின் பணி. இதில் எனது முடிவு என்று எதுவும் இல்லை. நான் ஒப்புதல் தர இயலாது.
நான் ஒப்புதல் தந்து விட்டதாக செய்திகள் வந்தால் அது மிகவும் தவறு. மத்திய அரசுதான் இதில் முடிவெடுக்க வேண்டும். நம்மைப் பொறுத்தவரைதமிழக மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்கள் பத்திரமாக போய் மீன் பிடிக்க வேண்டும், அந்தச் சூழல் உருவாக வேண்டும் என்பதுதான்என்று கூறியுள்ளார் கருணாநிதி.
சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளில் தாமதம், சர்ச்சை நிலவி வருவது குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதிலில், விமான நிலையவிரிவாக்கத்துக்கான இடத்தை எடுப்து குறித்து தமிழகத்தில் எதிர்ப்புகள், பல்வேறு கருத்துக்கள் எடுத்து வைக்கப்படுகின்றன. இதனால் இங்குதாமதம் நிலவுகிறது.
ஆனால் பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இதுபோன்ற எதிர்ப்பு இல்லை. எனவே அங்கு பணிகள் விரைவாக நடக்கின்றன.சென்னையில், அனைத்துப் பிரிவினரின் கருத்துக்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது என்றார் கருணாநிதி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications