டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாமக போட்டி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:தமிழகம், புதுவை தவிர தற்போது டெல்லி அரசியலிலும் கால் பதிக்கிறது பாமக.

தமிழகத்தின் முக்கிய அரசியல் சக்தியாக திகழ்கிறது பாமக. அதேபோல புதுவையிலும் கணிசமான ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைக்கும்நாளுக்காக காத்துக் கொண்டுள்ளது.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குக் கொண்ட கட்சி என்ற பெயரை மாற்ற, தமிழகத்தின் இதரப் பகுதிகளிலும் தொண்டர்பலத்தைக் கூட்டும் முயற்சிகளில் பாமக ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது டெல்லி அரசியலிலும் கால் வைக்கிறது பாமக. ஏற்கனவே அங்கு பாமக கட்சி ரீதியாக கால் பதித்துள்ளது. தற்போதுடெல்லி மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட பாமக முடிவு செய்துள்ளது.

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், வேட்பாளர்களைத் தேர்வு செய்வது தொடர்பாகவும் முன்னாள் மத்தியஅமைச்சர் ஏ.கே.மூர்த்தி முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லியில் 272 வார்டுகளில் போட்டியிட பாமக தயார். இவற்றில் பலவார்டுகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் கணிசமான வார்டுகளில் வெற்றி பெற முடியும். அதுகுறித்தும் கூட்டத்தில்ஆலோசிக்கப்பட்டது.

டெல்லியிலும் பாமகவுக்கு நல்ல தொண்டர் பலமும், வலுவான கட்சி அமைப்பும் உள்ளது என்றார் மூர்த்தி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+