லோக்சபா கலாட்டா: பிரணாப் தலைமையில் சமரசக் கூட்டம்
டெல்லி:கடல் சார் பல்கலைக்கழகத்தை சென்னையில் அமைப்பது தொடர்பாக லோக்சபாவில் நேற்று மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஉறுப்பினர்கள் மோசமாக நடந்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து லோக்சபா முன்னவரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான பிரணாப் முகர்ஜிதலைமையில் சமரசக் கூட்டம் நடைபெற்றது.
சென்னையில் கடல் சார் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை நேற்று லோக்சபாவில் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர். பாலு தாக்கல்செய்ய முயன்றபோது, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் ரகளையில்ஈடுபட்டனர்.
பாலுவை நோக்கிப் பாய்ந்த அவர்கள் அவரது கையில் இருந்த மசோதாவைப் பறித்துக் கிழிக்க முயன்றனர். இதையடுத்து திமுக எம்.பிக்களும்,தமிழகத்தைகச் சேர்ந்த எம்.பிக்களும் திரண்டு வந்து மார்க்சிஸ்ட் எம்.பிக்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளும், அடிதடியும் நடந்தது. இந்த சம்பவத்தால் நேற்று 6 முறை மக்களவைஒத்திவைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி வருத்தமும், அதிருப்தியும் வெளியிட்டார். இது ஒரு மோசமான நாள் என்று அவர் இதைவர்ணித்துள்ளார். இதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குள் நடக்கும் சிவில் வாரை இதுவெளிப்படுத்துகிறது என்று விமர்சித்துள்ளார்.
சபை முன்னவர் பிரணாப் முகர்ஜி பேசுகையில், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அதில் திருத்தம் கொண்டு வரபல வழிகள் உள்ளன. மசோதாவை தாக்கல் செய்தவுடனேயே அது சட்டமாகி விடாது. நிலைக்குழுவுக்கு அனுப்பப்படும். அப்போதுஎதிர்ப்புகளையும், திருத்தங்களையும் கூறலாம்.
அதை விடுத்து சபையில் இப்படி அநாகரீகமாக உறுப்பினர்கள் நடந்து கொண்டது வருத்தம் தருகிறது. மகிழ்ச்சி தரும் நிகழ்வு அல்ல இது என்றார்.
பின்னர் அவசரக் கூட்டம் ஒன்றை பிரணாப் முகர்ஜி கூட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை சமாதானப்படுத்தும் வகையில் கூட்டப்பட்டஇந்த கூட்டத்தில், நிதியமைச்சர் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, இடது சாரித் தலைவர்கள் குருதாஸ் தாஸ் குப்தா, சலீம் முகமது,ரூப்சந்த் பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மசோதாவைத் தாக்கல் செய்த பின்னர் அதை நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்புவது, இந்த விவகாரம் தொடர்பாக இடது சாரிக்கட்சிகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதை இடது சாரித் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
அதன் பின்னர் டி.ஆர்.பாலு, மசோதாவைத் தாக்கல் செய்தார். அதன் பிறகு நிலைக்குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்படுவதாக சபாநாயகர்சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்தார். அத்துடன் பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்குவந்தது.
முன்னதாக லோக்சபாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா எழுந்து பேசுகையில், காலையில் நடந்த சம்பவம்மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மிகுந்த உணர்ச்சிவசப்பட்டதால் இப்படி எம்.பிக்கள் நடந்துகொண்டு விட்டனர். இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எனது கட்சியின் சார்பில் சபாநாயகரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களது நடவடிக்கையால் சபாநாயகருக்கும், அவரது பதவிக்கும், இந்த அவையின் கண்ணியத்திற்கும் பங்கம் ஏற்பட்டிருந்தால் அதற்காக மிகவும்வருந்துகிறேன் என்றார் பாசுதேவ் ஆச்சார்யா.
கடல்சார் பல்கலைக்கழகம்: விவகாரத்தின் பின்னணி
கொல்கத்தாவில் கடல் சார் பொறியியல் மற்றும் ஆய்வு நிலையம் தற்போது உள்ளது. இந்த நிலையில் கடல்சார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கமத்திய அரசு முடிவு செய்தது.
ஏற்கனவே கடல்சார் பொறியியல் மற்றும் ஆய்வு நிலையம் கொல்கத்தாவில் இருப்பதால் இங்கேயே பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் எனமேற்கு வங்கத்தைச் சேர்ந்த இடதுசாரி எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் கொல்கத்தாவில் உள்ள துறைமுகம் சாதாரண ஆற்றுமுகத்துவார துறைமுகம்தான். சென்னையில் இருப்பது மிகவும் பெரிதான, வசதியானதுறைமுகம் என்பதாலும், கொல்கத்தாவை விட சென்னை துறைமுகம் அதிக அளவில் சரக்குகளைகையாளுவதாலும், சென்னையில் பல்கலைக்கழகத்தை நிறுவ மத்திய அரசு தீர்மானித்தது.
சென்னையில் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்தின் துணை அமைப்புகளாக கொல்கத்தா, மும்பை, விசாகப்பட்டனம் துறைமுகங்கள் செயல்படும்எனவும் மத்திய அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 18ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த மத்தியஅமைச்சர் சரத்பவாரைத் தவிர மற்ற யாரும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
பவாரின் எதிர்ப்பைத் தொடர்ந்து, டி.ஆர்.பாலு எழுந்து, பல்கலைக்கழகம் அமைக்க போதுமான நிலத்தை மகாராஷ்டிர அரசிடமிருந்து பவார்பெற்றுக் கொடுத்தால் மும்பையில் அமைக்க நாங்கள் தயார் என்றார். ஆனால் நிலத்தை வாங்கித் தர இயலாத நிலையில் உள்ளதாக பவார்தெரிவித்தார். பின்னர் சென்னையில் அமைக்கும் முடிவுக்குஅவரும் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சென்னையில் கடல் சார் பல்கலைக்கழகத்தை அமைக்கும் முடிவுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்பாக 2005-06ம் ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டம் குறித்து நிதியமைச்சர் ப.சிதம்பர.ம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இத்தனையும்நடந்து, எல்லாவித எதிர்ப்புகளையும் தாண்டி ஒப்புதல் பெற்ற பின்னரே லோக்சபாவில் மசோதாவைத் தாக்கல் செய்தார் பாலு. ஆனால் கடைசிநேரத்தில் களேபரம் செய்து குழப்பம் ஏற்படுத்தி விட்டனர் மேற்கு வங்க கம்யூனிஸ்ட் தோழர்கள்.












Click it and Unblock the Notifications