பாலு மீதான முற்றுகை: ராமதாஸ் கண்டனம்
சென்னை:கடல்சார் பல்கலைக்கழக மசோதாவை தாக்கல் செய்ய முயன்ற மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஎம்.பிக்கள் முற்றுகையிட்டு, மசோதாவைப் பறிக்க முயன்ற செயல் மிகவும் வருத்தத்திற்குரிய, துக்ககரமான ஒன்றாகும் என்று பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தேதிய கடல் சார் பல்கலைக்கழக சட்ட மசோதாவை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுமக்களவையில் அறிமுகம் செய்தபோது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதைத் தடுத்து நிறுத்திய விதம் மிகவும் வேதனைக்குரியதாகும்.வருத்தத்திற்குரியதாகும்.
இந்த நிகழ்வும், அதையொட்டி நடைபெற்ற தள்ளுமுள்ளு, கைகலப்பு ஆகியவை, மக்களவைத் தலைவர் கூறியதைப் போன்று, இந்திய நாடாளுமன்றவளாகத்தில் துக்கரகமான ஒன்றாகும்.
சென்னையில் கடல் சார் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த ஒராண்டாகவே பேசப்பட்டுவரும் ஒன்று. சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யலாம் என்று மக்களவைத் தலைவர் அனுமதி அளித்துள்ளார்.
இவ்வளவு இருந்தும் எந்தவொரு கட்டத்திலும் இந்த சட்ட முன்வடிவை எதிர்க்காமல் இருந்து விட்டு, அவையின் அனுமதியுடன் அமைச்சர் பாலுஅறிமுகம் செய்ய முற்பட்டபோது அவரது கைகளைப் பற்றி இழுத்து, சட்ட முன்வடிவு நகலைப் பறித்து கிழித்து எறிய முற்பட்டிருப்பது மிகவும்வருந்தத்தக்கச் செயலாகும்.
தங்களது மாநிலத்திற்கு இப்படி ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்று மேற்கு வங்கத்தினர் கோருவது அவர்களது உரிமை. அதற்குப் பதிலாகசென்னையில் அமையக் கூடாது என்று கூறுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
என்ன ஆனாலும், சென்னையில் கடல் சார் பல்கலைக்கழகம் அமைந்தே தீர வேண்டும். அதில் மத்திய அரசும், அமைச்சர் டி.ஆர்.பாலுவும் உறுதியாகஇருந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications