பாம்பன் மீனவர் சுடப்பட்ட கடல் பகுதியில்தமிழக காவல் அதிகாரிகள் ஆய்வு
சென்னை:இலங்கை கடற்படையினரால் பாம்பன் மீனவர் கிறிஸ்டோபர் நடுக் கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகள்நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படை திடீர் தாக்குதல் நடத்தியது. அவர்கள் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் கிறிஸ்டோபர் என்ற மீனவர் பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கிறிஸ்டோபர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
கடலோர பிரிவு காவல்துறை கூடுதல் டிஜிபி ஜெகன், கூடுதல் டிஜிபி மோகன் சேஷாத்ரி, கடலோரக் காவல்படை கமாண்டர் ராஜேந்திர சிங்,உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி நாஞ்சில் குமரன், தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
ராமநாதபுரம் வந்த அவர்கள் அங்கிருந்து குட்டி விமானம் மூலம் உச்சிப்புளி கடற்படைத் தளத்திற்குச் சென்றனர். பின்னர் கார் மூலம் மண்டபம்கடலோரக் காவல் படை முகாமுக்கு சென்றனர். அங்கிருந்து ஹோவர்கிராப்ட் மூலம் கடலுக்குள் சென்றனர்.
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட கடல் பகுதியை காவல்துறை அதிகாரிகள் குழு நேரில் பார்வையிட்டது. பின்னர் இந்திய,இலங்கை கடல் எல்லைக்கும் இக்குழு சென்று ஆய்வு செய்தது.
இந்த ஆய்வின்போது என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் பத்திரிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.அதேபோல இந்தக் குழுவின் வருகை குறித்தும் யாருக்கும் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு சிறப்பு முகாமுக்கும் காவல்துறை குழு சென்றது. அங்கு தங்கியுள்ள வீரர்களுடன்அதிகாரிகள் பேசினர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வீரர்களுடன் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications