பஞ்சரைத் தடுக்க வருகிறது டிவிஎஸ் மாடல்
சென்னை:அரசுப் பேருந்துகள் பஞ்சர் ஆகி பாதியில் நின்று விடுவதைத் தடுக்க சாலைகளில் உள்ள ஆணிகள், இரும்புத் துண்டுகள் ஆகியவற்றை அகற்றபேருந்துகளில் காந்தத்தைப் பொருத்தும் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர்கே.என். நேரு கூறியுள்ளார்.
மதுரை மாநகரில் ஒரு காலத்தில் டி.வி.எஸ். நிறுவனம் பொதுப் போக்குவரத்தை நடத்தியது. அப்போது டிவிஎஸ் நிறுவன டவுன் பஸ்கள் சாலையில்போவதற்கு முன்பு ஒரு வாகனம் செல்லும். அந்த வாகனம், சாலையில் கிடக்கும் இரும்புக் கம்பிகள், ஆணிகள் உள்ளிட்ட டயர்களின் எதிரிகளைஅகற்றியபடி செல்லும்.
அந்த வாகனத்தில் காந்தம் பொருத்தப்பட்டு அதன் மூலம் ஆணி, இரும்புத் துண்டுகளை அகற்றும் பணியை டிவிஎஸ் நிறுவனம் மேற்கொண்டது.இதன் மூலம் டிவிஎஸ் நிறுவன பேருந்துகள் பஞ்சர் ஆகாமல், டயர்கள் காப்பாற்றப்பட்டன.
இந்த பலே திட்டம் தற்போது மீண்டும் உயிர் பெறுகிறது. இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், சாலைகளில்செல்லும்போது வாகனங்களின் டயர்கள் பஞ்சர் ஆவதை தடுக்க, தனியார் நிறுவனத்தின் உதவியோடு சாலைகளில் உள்ள இரும்பு துண்டுகள் மற்றும்ஆணிகள் போன்றவற்றை காந்தம் மூலம் அகற்ற திட்டமிட்டுள்ளோம். இந்த வாகனங்கள் அடிக்கடி சாலைகளில் பயணித்து இரும்புப் பொருட்களைஅகற்றும்.
திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில்தான், எம் சர்வீஸ், எல்லோ லைன், புளூ லைன் போன்றபேருந்துகளுக்கு அரசாணை வழங்கப்பட்டது. அதை நாங்கள் அமுல்படுத்தியுள்ளோம். இந்த பேருந்துகள் 40.கி.மீ வரை செல்கின்றன. மக்கள்இந்தப் பேருந்துகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வெளி மாநிலங்களுக்கு செல்ல ரூ.52 லட்சம் மதிப்புள்ள வால்வோ பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்ட திட்டமிட்டுள்ளோம்.
அதி நவீனமாக அமைக்கப்பட்டு வரும் ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில், பேருந்து வசதிகள் அதிகரிக்கப்படும். தற்போது இந்த ரூட்டில், சராசரியாக ரூ.95லட்சம் வசூலாகிறது. கூடுதல் பேருந்துகள் மூலம் ரூ. 1 கோடியே 28 லட்சம் அதிக வசூலாகும் என்றார் நேரு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications