ராமதாஸுக்கு கருணாநிதி அட்டாக் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் சாராயம் இல்லை என்று கூறிய பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் கருணாநிதி அளித்துள்ள பதிலில்,குஜராத்தில் சாராய ஆறு ஓடியதாகவும், அங்கு கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியான சம்பவத்தையும் விவரித்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்பாக ராமதாஸ் கடும் குற்றம் சாட்டி வருகிறார். மதுக் கடைகளை மூடினால், கள்ளச்சாராயம் பெருகும் என்றுகருணாநிதி கூற, அப்படிப் பெருகினால் அரசு அதைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டது என்று பொருள் என்று ராமதாஸ் பதிலுக்கு எகிற இருவருக்கும்இடையே அறிக்கைப் போர் நாளுக்கு நாள் சூடாகிவருகிறது.

சமீபத்தில் ராமதாஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், குஜராத் மாநிலத்தில் சாராயக் கடைகளே இல்லாமல் அந்த மாநில அரசு நிதி வருவாயைப்பெருக்கி மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதைப் பின்பற்றி தமிழக அரசும் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்என்று அறிவுரை கூறியிருந்தார்.

இதற்கு தற்போது முதல்வர் கருணாநிதி தனது கேள்வி பதில் பாணி அறிக்கையில் பதில் அளித்துள்ளார்.

கேள்வி: டாஸ்மாக் மொத்த கொள்முதல் வியாபாரம் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 1983ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சில்லறைக் கடைகள்,பார் எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்திலே தொடங்கப்பட்டது. ஆனால் அப்போது அதற்கு அதிகமாக எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள்இப்போது திமுக ஆட்சி அமையும்போதெல்லாம் மது விலக்கு கொள்கை பற்றி அதிகமாகப் பேசுகிறார்கள்.

அப்படிப்பட்டவர்களின் கேள்விக்கு தாங்கள் 1990ல் நிதி நிலை அறிக்கை மீது பொது விவாதம் நடந்தபோது மது விலக்கு சாத்தியமா என்ற கருத்துபற்றி நீங்கள் சுட்டிக் காட்டியதை தற்போது நினைவுபடுத்த முடியுமா?

கருணாநிதி: நினைவுபடுத்த வேண்டிய நேரம் தான் இது. 1999, மார்ச் 26ம் தேதி நான் பேரவையில் பேசியதன் விவரம்:

அண்மையில், ஏப்ரல் திங்கள், 1989ல் புரோப் இந்தியா என்ற பத்திரிக்கையில், மிஸ்ரா என்ற துணை ஆசிரியர் எழுதுகிறார். மிஸ்ரா சொல்கிறார்:போர்பந்தரில் மகாத்மா காந்தியின் சொந்த ஊரில், ஒரு கள்ளச்சாராய வியாபாரி, தரைக்கு அடியில் பெட்ரோலைச் சேமிப்பதைப் போல பெரியகுளம் கட்டி 50 ஆயிரம் லிட்டர் சாராயத்தைத் தேக்கி வைத்திருக்கிறார்.

பெட்ரோல் பங்க் போலவே அவரது கடையில் ஒரு கைம்பம்பு உள்ளது. கைப்பம்பை அடித்தால், பாதாளத்திலிருந்து பாய்ந்து வருகிறது சாராயம்.எங்கோ, தொலை தூரத்தில், டெல்லி ராஜ்காட்டில், மகாத்மா காந்தி தனது சமாதியில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்.

தனது பிறந்த நாளை வீட்டுக்குப் பக்கத்திலே, நான்கு ரூபாய் தந்தால், கள்ளச்சாராயம் ஒரு முழு கிளாஸ் அளவுக்குக் கிடைக்கிறது என்பதை காந்திஅறிய நேர்ந்தால், சமாதியின் அடியிலேயே நெளிவார். இது மிஸ்ரா எழுதிய கட்டரை.

இன்னொன்று. இது நாடாளுமன்றத்திலே நடைபெற்றது. மது விலக்கு தொடர்பாக 1976ம் ஆண்டு இந்திரா காந்தி இப்படிக் கூறுகிறார்:

குமாரி மனிபென் பொதுமக்கள் குடிப்பதைப் பற்றிப் பேசுகிறார். உங்களுக்கு எல்லாம் தெரியும், நாங்கள் குடிப்பழக்கத்திற்கு எதிராக ஒருஇயக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். ஆனால் மது விலக்குக் கொள்கையிலே, மாதிரி மாநிலம் எனப் பேசப்படும் குஜராத்தில் என்னநிலை?

சட்டமன்றத் தேர்தல்களின்போது டேங்கரில் கொண்டு வந்து சாராய விநியோகம் செய்யப்படுவதாக அந்த நேரத்திலே கேள்விப்பட்டேன். சூரதிதல்சமீபத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பல பேர் மரணம் அடைந்ததை செய்தித் தாள்களிலே படித்தேன் என்று இந்திரா சொன்னார்.

கேள்வி: தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் மது விலக்குக் குற்றங்கள் நடைபெறவில்லையா?

கருணாநிதி: இதுகுறித்து 1990ம் ஆண்டு சட்டசபையில் நான் அளித்துள்ள பதில்: மது விலக்குச் சட்டத்தின் கீழ் காவல் துறையினரால்கண்டுபிடிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட குற்றங்களுடைய எண்ணிக்கை:

1961ல் 1,12,889, 1962ல் 1,29,977, 1963ல் 1,23,006, 1964ல் 1,37,716, 1965ல்1,65,052, 1966ல் 1,89, 348, 1967ல் 1,90,713, 19658ல் 2,53,607, 1969ல் 3,06,555,1970ல் 3,72,472 பேர்.

நான் இந்தக் கணக்கை அவையில் தெரிவித்த போதிலும், அதற்கு முன்பாகவே எம்.ஜி.ஆர். ஆனந்த விகடன் பத்திரிக்கையில் எழுதிய ஒருகட்டுரையில் தெரிவித்து விட்டார்.

கேள்வி: முடிசூட்டியபோதே, இது முள் குத்தும் கிரீடம் என்பதை உணர்ந்தீர்களா.?

கருணாநிதி: குத்தும் முட்கள் அல்ல, கொட்டும் தேள்கள் நிரம்பிய கிரீடம் என்பது அப்போதும் தெரியும், இப்போதும் தெரியும், எப்போதும்தெரியும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

ராமதாஸை கிட்டத்தட்ட நேரடியாக தாக்கும் அளவுக்கு கருணாநிதியின் அறிக்கை உள்ளது அரசியல் அரங்கில் விரைவில் புதிய சூழ்நிலை உருவாகப்போவதை உணர்த்துவதாக தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+