கருணாநிதிக்கு இறைச்சிக் கடைக்காரர்கள் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:ரிலையன்ஸ் போன்ற மாபெரும் நிறுவனங்கள் சில்லறை இறைச்சிக் கடைகளை திறந்தால் தங்களது நிலை படு மோசமாகி விடும். அதிலிருந்துசில்லறை இறைச்சிக் கடைக்காரர்களை முதல்வர் கருணாநிதிதான் காப்பாற்ற வேண்டும் என்று தமிழக அனைத்து இறைச்சி கடை வியாபாரிகள்சங்கங்களின் கூட்டமைப்பு கோரியுள்ளது.

ரிலையன்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் சில்லறைக் காய்கறிக் கடைகளை தொடங்கி கலக்க ஆரம்பித்துள்ள்ளன. இதனால் சில்லறைக் காய்கறிக்கடைக்காரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் சில்லறை இறைச்சி விற்பனையிலும் குதித்துள்ளது. வழக்கமான கடைகளில் ஆடு, கோழி போன்றஇறைச்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட இங்கு குறைவாக தரப்படவுள்ளது.

இதனால் சில்லறை இறைச்சிக்கடைக்காரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து இறைச்சிக் கடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சபீர் அகமது, பொதுச் செயலாளர்அன்புவேந்தன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் சில்லறை விலை இறைச்சிக் கடைகளைதொடங்கினால், தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சில்லறை விலை இறைச்சி விற்பனைக் கூடங்கள் முடங்கிப் போய் விடும்.

பல தலைமுறைகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள இறைச்சிக் கடை வியாபாரிகள் வேறு தொழிலுக்குப் போக முடியாமல் கடும் பாதிப்புக்குஉள்ளாவார்கள். இதைத் தடுத்து நிறுத்தி இறைச்சிக் கடை வியாபாரிகளைக் காக்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில்லறைக் காய்கறி விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதை எதிர்த்து கோயம்பேடு மொத்த காய்கறி மற்றும் பழ மார்க்கெட் சங்கம்வருகிற 23ம் தேதி அழைப்பு விடுத்துள்ள ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எங்களதுஅமைப்பு ஆதரவு தெரிவிக்கிறது. அன்று இறைச்சிக் கடைகளும் மூடப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள 37 இறைச்சிக் கூடங்கள் நவீனமாக்கப்படும் என கூறியுள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்களதுநன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+