விஜயகாந்த் பக்கத்தில் இடிப்பு ஆரம்பம்
சென்னை:தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான கல்யாண மண்டபத்தின் அருகே உள்ள கட்டடங்களை இடிக்கும் பணி தொடங்கி விறுவிறுப்பாகநடந்து வருகிறது.
சென்னை கோயம்பேடு சந்திப்பில் புதிய அடுக்கு மேம்பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர்கல்யாண மண்டபம் உள்ளிட்ட பல கட்டடங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
தனது மண்டபத்தை இடிப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா அப்பீல் செய்துள்ளார்.
இந்த நிலையில் விஜயகாந்த் மண்டபத்துக்கு அருகே உள்ள கட்டடங்களை இடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கல்யாண மண்டபத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள கட்டடங்களை தற்போது இடிக்க ஆரம்பித்துள்ளனர்.
விஜயகாந்த் தனது கல்யாண மண்டபத்தின் கையகப்படுத்தப்படும் பகுதியை 4 வாரங்களுக்குள் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்என உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. அதன் பின்னர் கல்யாண மண்டபத்தின் பெரும்பகுதியை இடிக்கும் பணி தொடங்கும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே கல்யாண மண்டபத்தை ஒட்டியுள்ள வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் சற்று தாமதப்படுத்தியிருக்கிறார்கள். அங்குகுடியிருப்பவர்கள் 15 நாள் அவகாசம் கேட்டுள்ளதால் இந்த தாமதம் என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications