ஜெ. உண்ணாவிரதம்: வைகோ முடித்து வைக்கிறார்
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிட வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மேற்கொள்ளஉண்ணாவிரதத்தை மாலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழச்சாறு கொடுத்து முடித்து வைப்பார் என அதிமுக தலைமைக் கழகம்தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16 ஆண்டு காலமாக கடுமையாக போராடி பெற்ற காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்தும், இறுதிதீர்ப்பை உடனடியாக மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தியும் அதிமுக சார்பில் வருகின்ற 18ம் தேதிசென்னையிலும், 21ம் தேதி ஏனைய மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
18 ம்தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் தலைமை ஏற்கிறார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் காலை 9 மணி அளவில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன்தொடங்கி வைப்பார்.
உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுக தோழமைக் கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டு வாழ்த்துரைவழங்குவார்கள்.
மாலை 5 மணி அளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைப்பார். இதில் தோழமை கட்சித்தலைவர்களும் விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வாழ்த்தி பேச உள்ளனர் எனகூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications