அரசுக் கட்டடம் இடிந்து விழுந்தது
சென்னை:சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள நூறு ஆண்டு பழமை வாய்ந்த அரசுக் கட்டடத்தின் மேல் கூரை அப்படியே இடிந்து விழுந்தது.அப்போது ஊழியர்கள் யாரும் அங்கு இல்லை என்பதால் உயிர்ச் சேதம் தடுக்கப்பட்டது.
சென்னை சேப்பாக்கத்தில், நூற்ராண்டு பழமையான பல கட்டடங்கள் உள்ளன. இங்கு பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல துறை அலுவலகங்கள் இங்கு உள்ளன.
தோட்டக்கலைத்துறை இயக்குநர் அலுவலகம் இதே பகுதியில்தான் உள்ளது. 2 மாடிக் கட்டடமான இது மிகவும் பழமையானது. பல இடங்கள்சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
இந்த நிலையில், இக்கட்டடத்தின் முதல் மாடியின் மேல் கூரை நேற்று திடீரென பலத்த சப்தத்துடன் இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக அந்தஅலுலகத்தில் யாரும் இல்லாததால், உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்தக் கட்டடம் மிகவும் பழமையானது என்பதால் இக்கட்டடத்தில் அலுவலகம் எதுவும் தற்போது இயங்கவில்லை. சமீபத்தில்தான் வேறுகட்டடத்துக்கு இங்குள்ள ஊழியர்கள் மாறினர்.
கட்டடம் இடிந்ததைத் தொடர்ந்து அருகில் உள்ள பிற கட்டடங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் பயத்தில் தங்களதுஅலுவலகங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
சேப்பாக்கம் வளாகத்தில் உள்ள பல கட்டடங்கள் மிகவும் பழமையானது, சிதிலமடைந்தது. இவற்றின் கீழ் அமர்ந்துதான் ஆயிரக்கணக்கான அரசுஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கிட்டத்தட்ட உயிரைப் பணயம் வைத்துத்தான் இவர்கள் தினசரி வேலைக்கு வருகின்றனர்.
பல கட்டடங்களில் மனிதர்கள் இருக்கவே முடியாத அளவுக்கு பழமையானவை. அரசுக்காக உழைக்கும் எங்களின் நிலை குறித்து இதுவரை எந்தஅரசும் கவலைப்படவில்லை, இப்போது ஒரு கட்டடம் இடிந்துள்ளது. அடுத்து எந்தக் கட்டடமோ என்று சேப்பாக்கம் வளாகத்தில் உள்ள அரசுஊழியர்கள் பெரும் பீதியுடன் உள்ளனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications