பெர்முடாவை பின்னி எடுத்த இலங்கை:ஜிம்பாப்வே - அயர்லாந்து போட்டி டை
போர்ட் ஆப் ஸ்பெயின்:உலக கோப்பை "பி" பிரிவு ஆட்டத்தில் இலங்கைக்கும், பெர்முடாவுக்கும் நடந்த போட்டியில், இலங்கை அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மற்றொரு போட்டியில் ஜிம்பாப்வேயும், அயர்லாந்தும் ஒரே ஸ்கோரை எட்டியதால் போட்டி டையில் முடிந்தது.
இலங்கை, பெர்முடா அணிகளுக்கான போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடந்தது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனேமுதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடங்க வீரர்களான ஜெயசூர்யாவும், தரங்காவும் தொடக்கம் முதலே அடித்து ஆடி ரன் குவிப்பில் இறங்கினர். தரங்கா 30 ரன்களிலும்,ஜெயசூர்யா 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஜெயவர்த்தனேவும், சங்ககாராவும் சிறப்பாக விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தனர். சிறப்பாகவிளையாடிய ஜெயவர்த்தனே 85 ரன்களிலும், சங்ககாரா 76 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
![]() |
இறுதியில், 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. சமர சில்வா 55 ரன்களுடனும், அர்னால்டு 2ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய பெர்முடா ணி ஆட்டத்தின் முதல் ஒவரிலேயே தொடக்க ஆட்டகார்ஸ்மித் ஒரு ரன் கூட எடுக்காமல் வாஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
20 ரன்களைச் சேர்ப்பதற்குள் அடுத்தடுத்து 3 விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியில் திரும்பினர் பெர்முடா வீரர்கள். பார்டனர் 28 ரன்களும்,ஹெமம் 14 ரன்களும் எடுத்தனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்.
இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தட்டுத் தடுமாறிய பெர்முடா 24.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 78 ரன்கள்மட்டுமே எடுத்து 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகனாக ஜெயவர்த்தனே தேர்வு செய்யப்பட்டார்.
"டி" பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் டாஸில் வென்ற ஜிம்பாப்வே அணி அயர்லாந்தை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க வீரர்களாகபோர்ட்டட்பீல்டு, பிரே ஆகியோர் களம் இறங்கினார்கள்.
இதில் பீல்டு ஒரு ரன் கூட எடுக்கமால் வெளியேறினார். ஆனால் பிரே நிலைத்து நின்று ஆடி சதம் அடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்கமால் 115ரன்கள் குவித்தார் பிரே.
இதேபோ ஒயிட் (28), மார்கான் (21), ஜான்ஸ்டன் (20) ஆகியோரும் கணிசமான ரன்களைச் சேர்க்க உதவினர். ஆட்ட நேர இறுதியில் அயர்லாந்துஅணி 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது.
பின்னர் களம் கண்ட ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க வீரர்களான சிபுந்தா, மத்சிசென்யேரி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். சிபந்தா 67 ரன்கள்எடுத்தார்.
ஒரு கட்டத்தில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. 19 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 4விக்கெட்டுகளுடன் ஜிம்பாப்வே அணி விளையாடியாது. இதனால் எப்படியும் ஜிம்பாப்வே வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 212 ரன்னில் 1 விக்கெட்டும், 213 ரன்னில் 2 விக்கெட்டுகளும்விழுந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடைசி ஒவரில், கடைசி 2 பந்துகளில் 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு ஜிம்பாப்வே அணி தள்ளப்பட்டது. அப்போது ரெயின்ஸ் போர்டுஒரு ரன் ஆடித்து ஆட்டத்தை டையில் நிறுத்தினார்.
கடைசி பந்தில் ஒரு ரன் அடுத்தால் வெற்றி என்ற நிலையில் தொடக்க வீரரான மத்சிகென்யேரி எதிர் கொண்டார். அப்போது அவர் பந்தை தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க முயன்றார். அப்போது ரெயின்ஸ் போர்டு ரன் அவுட் ஆனார். இதனால் ஆட்டம் டையில் முடிவடைந்தது.
போட்டி டை ஆனதால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பிரித்து வழங்கப்பட்டன. சிறப்பாக ஆடி சதம் போட்ட அயர்லாந்து வீரர் பிரே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications