உருதைத் தவிர்க்க பாக். அணிக்கு அறிவுரை
கராச்சி:பேட்டிகளின்போது உருதில் பேசுவதைத் தவிர்க்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலர் அறிவுரை கூறியுள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்துள்ளது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தானிலிருந்துகிளம்பும்போதே, பேட்டிகளின்போது தாங்கள் உருதிலேயே பேசப் போவதாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி தற்போது பாக். அணி வீரர்கள் அளித்து வரும் பேட்டிகளில் உருதிலேயே பேசி வருகின்றனர். அவர்கள் பேசுவதை உருதும், ஆங்கிலமும்தெரிந்த ஒரு மொழி பெயர்ப்பாளர் மொழி பெயர்த்துக் கூறி வருகிறார்.
இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளது. பாகிஸ்தான் அணியின் மீடியா மேலாளர் பர்வேஸ் மிர், மேலாளற் தலத்அலி ஆகியோரிடம், இனிமேல் உருதில் பேட்டிகள் கொடுக்கக் கூடாது, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்மீடியா மேலாளர் பிரையன் முர்கட்ராய்ட் கூறியுள்ளாராம்.
பேட்டிகளுக்கு ஐசிசி நேரம் நிர்ணயித்துள்ளது. அதற்குள் பேட்டிகளை முடிக்க வேண்டும். ஆனால் உருதில் பேசுவதால் அதிக நேரம் ஆகிறது.எனவே இனிமேல் உருதில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும், அதை அனுமதிக்க முடியாது. ஆங்கிலத்தில்தான் பேட்டிகள் அமைய வேண்டும் என்றுபாகிஸ்தான் நிர்வாகத்துக்கு ஐசிசி கூறியுள்ளதாம்.
பாக். வீரர்கள் உருதில் பேசுவது புரியாமல் சில சர்வதேச பத்திரிக்கையாள்கள்தான் ஐசிசியிடம் புகார் கூறியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்தேஇந்த அட்வைஸை அளித்துள்ளது ஐசிசி.
உருதில் பேச வேண்டும் என்ற முடிவை பாக் அணியின் மீடியா மேலாளர் பர்வேஸ் மிர்தான் எடுத்தார். அதுவும் உலகக் கோப்பைப் போட்டிக்குக்கிளம்பும் நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அப்போதே இதற்கு கேப்டன் இன்சமாம் உல் ஹக் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பதுநினைவிருக்கலாம்.
ஆனால், உருது மொழியை உலக அளவில் பிரபலமாக்க இது உதவும். எனவே உருது மொழியை உலகம் முழுவதும் அறியச் செய்ய இது நல்லவாய்ப்பு என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் டாக்டர் நஸீம் அஷ்ரப் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications