சைக்கிள் திட்டத்தில் ஊழல் இல்லை: அமைச்சர்
சென்னை:தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளபடி எந்த முறைகேடும் நடைபெறவில்லைஎன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழக அரசின் இலவச சைக்கிள் திட்டத்தில் ரூ. 20 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக ஜெயலலிதா கூறுகிறார். இந்தப் புகாரை அமைச்சர்பன்னீர் செல்வம் மறுத்துள்ளார். இதுதொடர்பாக பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை:
தான் திருடி பிறரை நம்பார் என்பது பழமொழி. ஜெயலிலதா ஆட்சிக்காலத்தில் இலவச சைக்கிள்கள் வழங்கியதில் நடைபெற்ற முறைகேடு அப்போதுஆதாரப்பூர்வமாக எடுத்துக் காட்டப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டத்திலே தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு சில சில்லறைவியாபாரிகள் முயற்சித்து, அவர்களின் வேண்டுகோள் கேட்கப்படாததால், இத்திட்டத்தில் தவறு என்று அறிக்கை விடுத்தார்கள்.
அந்த அறிக்கையைத்தான் கடன் வாங்கி தனது பெயரை சேர்த்து வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா.
இந்த ஆண்டு இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் ஒப்பந்தப்புள்ளி கோரியதில், டிஐ சைக்கிள் சென்னை, ஹீரோ சைக்கிள் லூதியானா, அல்டாஸ்சைக்கில் லூதியானா, ஏவான் சைக்கிள் லூதியானா ஆகிய நான்கு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி பெறப்படட்து.
மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சைக்கிளின் விலை ரூ. 2,241 எனவும், மாணவிகளுக்கான சைக்கிளின் விலை ரூ. 2,151 என்றும் விலைநிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. பின்னர் மேற்கண்ட நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் இறுதியில்,மாணவர்களுக்கு ரூ. 2,150 விலையிலும், மாணவிகளுக்கு ரூ. 2,060 எனவும் விலை குறைக்கப்பட்டு நான்கு நிறுவனங்களுக்கும் ஆணைவழங்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில் மாணவிகளுக்கான சைக்கிளின் விலை ரூ. 1,895, தமிழகத்தில் இதன் விலை ரூ. 2,060. விலை வித்தியாசம் ரூ. 1,65தான்.உண்மை இவ்வாறிருக்க தமிழக அரசு கூடுதலாக 400 ரூபாய் கொடுத்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது முதல் பொய்.
அதேபோல மத்திய பிரதேச மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ள சைக்கிள்கள் ஐஎஸ்ஐ தரம் இல்லாதவை. ஆனால் ஐஎஸ்ஐ தரம் உள்ளவை என்றுஜெயலிலதா இன்னொரு பொய்யைச் சொல்லியுள்ளார்.
மேலும், தமிழக அரசு வழங்கும் சைக்கிள்களில் முழு ஸ்டாண்டு, முழு செயின் கவர், மாணவிகளின் உடைகள் சக்கரத்தில் சிக்கிக் கொள்ளாமல்இருக்க சாரி கார்டு, புத்தகம் வைக்கும் கூடை, 7 லீவர் கொண்ட மெட்டாலிக் பூட்டு முதலிய கூடுதல் வசதிகள் கொண்டவை. மத்திய பிரதேசமாநிலத்தில் வழங்கப்படும் சைக்கிள்களில் இந்த வசதிகள் இல்லை.
மேலும் சைக்கிள்களை மத்திய பிரதேச அரசு நேரடியாக பள்ளிக்கூடங்களில் வழங்குவதில்லை. மாறாக அதை கொண்டு வந்து சேர்ப்பதற்கானபோக்குவரத்துச் செலவை தனியாகப் பெற்றுக் கொள்கிறது.
எனவே தமிழகத்தில் வழங்கப்படும் இலவச சைக்கிள்கள் தமிழக அரசு கூடுதல் விலை கொடுத்துள்ளது என்று ஜெயலலிதா கூறுவது முழுப்பொய்யாகும்.
தனது ஆட்சிக்காலத்தில் மிகச் சிறப்பாக சைக்கிள்கள் வழங்கப்பட்டதாக ஜெயலலிதா கூறுகிறார். 2004-05ல் மாணவர்கள் தேர்வு எழுதி முடித்துவிட்டுச் சென்ற பிறகுதான் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதனால் ரூ. 17 கோடி விரயம் ஆனதாக மாநில கணக்காயர் தணிக்கை அறிக்கையில்குறிப்பிட்டுள்ளார் என்று கூறியுள்ளார் பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications