சோனியாவுக்கு பாமக எடுக்கும் பாராட்டு விழா
சென்னை:பிற்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நிறைவேற உதவிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சென்னையில்பாராட்டு விழா நடத்த பாமக முடிவு செய்து சோனியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பாமக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா,நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு ஆதரவும், ஒத்துழைப்பும் நல்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் தலைவருமானசோனியா காந்திக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்த பாமக முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சோனியா காந்திக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இக்கடிதத்தை மத்திய அமைச்சர்கள்டாக்டர் அன்புமணி ராமதாஸ், வேலு, எம்.பிக்கள் ராமதாஸ், பொன்னுச்சாமி, ஏ.கே.மூர்த்தி, தன்ராஜ், செந்தில் ஆகியோர் அடங்கிய குழுவினர்டெல்லியில் சோனியா காந்தியை நேரில் சந்தித்து வழங்கினர்.
கடிதத்தைப் படித்துப் பார்த்த சோனியா காந்தி, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து, நன்றியும் தெரிவித்தார். இந்த மாத கடைசி வாரம்அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் பாராட்டு விழா நடத்தப்படும்.
முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை பாராட்டு விழாவுக்கு அழைக்கவுள்ளோம் என்றும் சோனியா காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது என்றுபாமக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications