மாமா லிங்க்: 5 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னைகன்னட பிரசாத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஐந்து காவல்துறை அதிகாரிகள் சென்னையை விட்டு தூக்கி அடிக்கப்பட்டுள்ளனர். மேலும்சிலரின் தலையும் உருளும் எனக் கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து கொண்டு தென்னிந்தியா முழுவதும் விபச்சாரத் தொழிலை நடத்தி அமோகமாக இருந்து வந்தவர் கன்னட பிரசாத். அவரதுவிபச்சார அழகிகள் பட்டியலில் கிட்டத்தட்ட அத்தனை முன்ணனி இளம் நடிகைகளும், அந்தக் கால முன்னணி நடிகைகளும்தான் அதிக அளவில்இடம் பெற்றிருந்தனர்.
நடிகைகளை வைத்து படு பிரமாதமாக விபச்சாரத்தை நடத்தி வந்தார் பிரசாத். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள்என சகலருக்கும் பிரசாத்தான் பாசமுள்ள மாமாவாக இருந்து பெண் கொடுத்து கவனித்துள்ளார்.
காவல்துறையில் பல அதிகாரிகளை மடக்கி தனது பிடியில் வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் பிடிபடாமல் தப்பித்து வந்துள்ளார் பிரசாத்.
பிரசாத் பிடிபட்டவுடன், தன்னுடன் தொடர்பு வைத்திருந்த காவல்துறை அதிகாரிகளின் பெயர்களை கக்கியுள்ளார். அதை அடிப்படையாகக்கொண்டு அந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இவர்களில் ஒருவர் பெண் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணையின் முடிவில் பிரசாத்துடன் தொடர்பு வைத்திருந்தது உறுதிப்படுத்தப்பட்ட ஐந்து அதிகாரிகள் சென்னையை விட்டே தூக்கிஅடிக்கப்பட்டுள்ளனராம்.
இவர்களில் ஒருவர் விபச்சாரத் தடுப்புப் பிரிவில் டிஎஸ்பியாக இருந்தவர். இன்னொருவர் சென்னை நகர சைபர் கிரைம் பிரிவில் டிஎஸ்பியாகஇருந்தவர். டிஜிபி உத்தரவின் பேரில் இந்த ஐந்து பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஐந்து பேர் தவிர மூன்று உதவி ஆணையர்கள், ஒரு இன்ஸ்பெக்டரும் சிக்கியுள்ளனர். விரைவில் இவர்களும் இடமாற்றம் செய்யப்படுவர் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
இடமாற்றத்தோடு நில்லாமல், துறை ரீதியான நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கப்படவுள்ளதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications