சிக்கினான் கில்லாடி பீரோ புல்லிங் கொள்ளையன்
சென்னை:சென்னை புறநகர்ப் பகுதி மக்களை நடு நடுங்க வைத்த பிரபல பீரோ புல்லிங் கொள்ளையன் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளான்.
சென்னை புறநகர்ப் பகுதிகளான மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டிய வீடுகளில் பீரோக்களை உடைத்து நகை, பணத்தைக்கொள்ளையடித்து வந்தது ஒரு கும்பல்.
இந்தக் கும்பலின் திருட்டு பாணியே மிகவும் அலாதியானது. பூட்டிய வீடுகளை நோட்டம் விட்டுக் கொள்வார்கள். பின்னர் நள்ளிரவுக்கு மேல்அந்த வீட்டுக்கு வருவார்கள். ஜன்னல் ஓரமாக உள்ள பீரோக்களை மெதுவாக நகற்றி, பூட்டைஉடைத்து உள்ளே உள்ள பொருட்களைத் திருடிச் செல்வார்கள்.
கடந்த பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் போலீஸாருக்கு பெரும் சவாலாக விளங்கி வந்தது. கொள்ளையர்களைப்பிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர்.
இந்த நிலையில் சமீபத்தில் சில வட நாட்டு பீரோ புல்லிங் கொள்ளையர்களை போலீஸார் பிடித்தனர். இருப்பினும் இந்தத் திருட்டு தொடர்ந்துவந்தது.
இந்தச் சூழ்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த ஒரு பீரோ புல்லிங் கொள்ளையனைப் போலீஸார் பிடித்துள்ளனர்.அவனது பெயர் நாகமணி. சென்னை வடபழனியில் தங்கியுள்ள இவன் புறநகர்ப் பகுதிகளில் பலவருடமாக பீரோ புல்லிங் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளான்.
இந்தத் திருடன் மீது மொத்தம் 68 கொள்ளை வழக்குகள் உள்ளன. கிட்டத்தட்ட 750 பவுன் நகைகளை இவன் திருடியுள்ளான். இந்த நகைகளைமீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் லத்திகா சரண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications