கை கூடாத காதல்: காதலியின் கணவர் பெயரில்வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!
சென்னை:காதல் தோற்றுப் போனதால் கடுப்பான காதலன், தனது காதலியின் கணவர் பெயரில் போலீஸாருக்கு போலியான வெடிகுண்டு புரளி கடிதம்அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை சைபர் கிரைம் போலீஸ் பிரிவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், சென்னை நகரின் முக்கிய இடங்களான ரிப்பன் பில்டிங், ரயில் நிலையங்கள்உள்ளிட்ட இடங்களில் குண்டுகள் வெடிக்கப் போவதாக வாசகம் இருந்தது.
கடிதத்தின் இறுதியில், கம்ப்யூட்டர் கோடிங் எழுத்துக்கள் இருந்தன. இதையடுத்து அந்த மர்ம நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் போலீஸார்குதித்தனர். கம்ப்யூட்டர் கோடிங் எழுத்துக்களை கம்ப்யூட்டர் நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்ததில் பிரகாஷ் என்றும் அவரது முகவரியும் தெரியவந்தது.
இதையடுத்து திரு.வி.க. நகரில் உள்ள பிரகாஷின் இல்லத்திற்குச் சென்று அவரை பிடித்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. பிரகாஷ் ஒருகம்ப்யூட்டர் பொறியாளர், ஆனால் அவருக்கும், கடிதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து பிரகாஷின் எதிரிகள் யாரோதான் இதைச் செய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகப்பட்டனர். பிரகாஷிடம் உங்களுக்குஎதிரிகள் யாராவது உண்டா என்று விசாரித்தபோது ஸ்டாலின் சஜீஸ் என்பவரின் பெயரைச் சொல்லி அதிர்ச்சியூட்டும் தகவலையும் தெரிவித்தார்பிரகாஷ்.
சமீபத்தில்தான் பிரகாஷுக்கு கல்யாணம் ஆகியுள்ளது. அவரது மனைவியை கல்யாணத்திற்கு முன்பு சஜீஸ் ஒரு தலையாக காதலித்துள்ளார். அவரதுகாதலை பிரகாஷின் மனைவி ஏற்கவில்லை. அதன் பின்னர் அவருக்கும், பிரகாஷுக்கும் கல்யாணம் ஆகி விட்டது.
இதனால் கோபமடைந்த சஜீஸ், பல வழிகளில் பிரகாஷையும், அவரது மனைவியையும் தொல்லைப்படுத்தி வந்துள்ளார். பிரகாஷின் மனைவியின்தந்தைக்குத் திடீர் திடீரென தந்தி அனுப்பி சென்னைக்கு வரவழைத்து அதிர்ச்சி தருவாராம்.
இந்த நிலையில்தான் பிரகாஷ் பெயரில் போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார் சஜீஸ்.
இதையடுத்து சஜீஸின் அலுவலகத்திற்கு போலீஸார் விரைந்தனர். சஜீஸ் எழும்பூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைபார்த்து வருகிறார்.
அலுவலகத்தில் வைத்து சஜீஸை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், ஆள் மாறாட்டம், இன்னொருவரின் கையெழுத்தைப்போடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சஜீஸுக்கு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications