நெஞ்சில் தூய்மையிருந்தால்..ஜெவுக்கு முதல்வர் சூடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவுக்கு நெஞ்சில் தூய்மையிருந்தால் அவரது இலவச சைக்கிள் திட்டத்துக்கு ஆடிட்டர் கொடுத்த ரிப்போர்ட்டை அவர் வெளியிடவேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுக ஆட்சியில் திட்டமிடப்படாமல் இலவச சைக்கிள் வழங்கியதில் ரூ. 17 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடாக நிதி செலவழிக்கப்பட்டதைசுட்டிக்காட்டி ஆடிட்டர் ரிப்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்த பிறகு அடிப்படை நோக்கத்தையே குலைக்கிற வகையில், 17 கோடியே 79 லட்சம் ரூபாய்மதிப்புள்ள சைக்கிள்களை வழங்கியதால், அந்தச் செலவே பயனற்றதாகி விட்டது என்று ஜெயலலிதாவின் நிர்வாகம் பற்றி தணிக்கை அதிகாரிஅளித்துள்ள சான்றிதழுக்கு ஜெயலலிதா தரப் போகும் பதில் என்ன?

திடீரென்று இதை விட்டுவிட்டு அடுத்த பிரச்னைக்கு தாவி விடுவார். அங்கே தாவி, அங்கிருந்து சவால் விட்டுவிட்டு நம்முடைய பதிலுக்கு முன்பேவேறிடம் பாய்ந்து விடுவார்.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பரில் சைக்கிள் வழங்க டெண்டர் கோரப்பட்டது. நான்கு கம்பெனிகள் ஒரே விலையைக் குறிப்பிட்டு ஒப்பந்தப்புள்ளிகளை தாக்கல் செய்தன. ஆனால், நான்கு பேருக்கும் உத்தரவு வழங்காமல், ஒரேயொரு நிறுவனத்துக்கு மட்டும் கொடுக்க முடிவு செய்துஉத்தரவு வழங்கியது உண்டா? இல்லையா?

இவ்வாறு ஒரு கம்பெனிக்கு வழங்குவதற்கு ஏதுவாக அவசர அவசரமாக நிதித்துறை சார்பில் 2005ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி அரசு உத்தரவு ஒன்றுவெளியிடப்பட்டது உண்டா? இல்லையா?

டெண்டர் பற்றி பேச்சுவார்த்தை நடத்தியபோது ஒரே விலையைக் குறிப்பிட்ட நான்கு நிறுவனத்தையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், ஒருநிறுவனத்தை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களுக்கே உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா இல்லையா?

நாணயமிருந்தால், நெஞ்சில் தூய்மையிருந்தால், முதலில் அவரது இலவச சைக்கிள் திட்டத்துக்கு, ஆடிட்டர் கொடுத்த மதிப்புரையைவெளியிடட்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+