ஜெ. மீது வழக்கு பதியக் கோரிய மனு தள்ளுபடி
சென்னை:தேர்தல் டிக்கெட் பணத்தைத் திரும்பத் தரத் தவறிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைஎடுக்க உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
சென்னையைச் சேர்ந்த ஜியாவுதீன் என்பவர் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், எம்.பி. தேர்தலில் போட்டியிடஅதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் எனக்கு சீட் கிடைக்கவில்லை.
இதேபோல கடந்த சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட ரூ. 10 ஆயிரம் கொடுத்து சீட் கேட்டேன். இதையடுத்து நான் கட்டிய டெபாசிட் பணத்தைத்திரும்பக் கேட்டேன். ஆனால் கொடுக்க மறுத்து விட்டார்கள்.
இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் பதில் இலலை. எனவே எனது தேர்தல் டிக்கெட் டெபாசிட் பணத்தைத் திரும்பித் தரமறுத்த ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த நிலையில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேதுராமன் தாக்கல் செய்த ஒரு மனுவில், அதிமுக கட்சி விதிப்படி தேர்தலில் டிக்கெட்கேட்டு டெபாசிட் செய்யப்படும் பணத்தைத் திரும்பக் கோர முடியாது. இதுதொடர்பாக கையெழுத்துப் பாட்டு விதிமுறைகளை ஏற்பதாக கூறிவிட்டுத்தான் அனைவரும் பணத்தைக் கட்டுகின்றனர்.
விளம்பரத்துக்காக ஜியாவுதீன் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே அவரது மனுவை தள்ளுபடிசெய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்தவழக்கை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா, அதிமுக சட்டவிதிப்படி கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்க முடியாது. எனவே மனுதாரரின் மனுதள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications