காங். கூட்டணியிலிருந்து விலகியது மதிமுக:மத்திய அரசுக்கும் ஆதரவு வாபஸ்
கோவை:மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாக மதிமுக அறிவித்துள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவுடன், தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி அடைந்த மதிமுக, திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிரடியாகஅதிமுகவுடன் கூட்டு வைத்தது.
திமுக கூட்டணியிலிருந்து மட்டும் விலகிய மதிமுக, மத்திய ஆளுங் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதாக அறிவித்தது. இதற்கு ஆட்சபேனைதெரிவித்த திமுக, மதிமுகவை மத்திய கூட்டணியிலிருந்து விலக்குமாறு அவ்வப்போது கோரி வந்தது.
இருப்பினும் மதிமுகவை நீக்காமல் காங்கிரஸ் கட்சி மெளனம் சாதித்து வந்தது. மேலும், கூட்டணி கூட்டங்களுக்கும் மதிமுகவுக்கு தொடர்ந்துஅழைப்பு அனுப்பப்பட்டு வந்தது.
ஆனால் சமீபத்தில், மதிமுக உள்கட்சிப் பூசல் விவகாரத்தில் சோனியா காந்தி பெயரையும், பிரதமர் பெயரையும் வைகோ இழுத்தால் காங்கிரஸ் கட்சிஅதிருப்தி அடைந்தது. வைகோவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனமும் தெரிவித்தது.
இந்த நிலையில், மத்திய ஆளுங்கூட்டணியிலிருந்து விலகுவதாக வைகோ அறிவித்துள்ளார். கோவையில், மதிமுக மண்டல மாநாடு நடந்தது. இந்தமாநாட்டில் கூட்டணியிலிருந்து விலகுவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மான விவரம்:மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகி விட்டன. இருப்பினும் குறைந்தபட்ச செயல் திட்டத்தைநிறைவேற்றத் தவறி விட்டது.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நலனைக் காக்கத் தவறி விட்டது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக குறைந்தபட்ச பொதுச் செயலத் திட்டம் தயாரிக்கப்பட்டபோது மதிமுக சார்பில் 17 அம்ச கோரிக்கைகள்முன்வைக்கப்பட்டன. தென்னக நதிகள் இணைப்பு, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர உதவி செய்தல்உள்ளிட்ட அந்தக் கோரிக்கைகளை காங்கிரஸ் கூட்டணி நிறைவேற்றத் தவறி விட்டது.
எனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறவும், கூட்டணியிலிருந்து விலகவும் தீர்மானிக்கப்படுகிறதுஎன்று கூறப்பட்டுள்ளது.
இதேபால இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான இன்னொரு தீர்மானத்தில், கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஈழத் தமிழர்கள் மீது இனப்படுகொலையை ஏவி வரும் சிங்கள அரசுக்கு மறைமுகமாக உதவிடும் வகையில் சிங்கள விமானப்படை விமானிகளுக்கும், சிங்கள ராணுவம்,காவல்துறையினருக்குப் பயிற்சி அளிப்பதும், சிங்கள ராணுவத்துக்கு ரேடார் கருவிகளை அளித்ததோடு, மறைமுகமாக ஆயுத விற்பனை செய்தல்போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.
இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்குவதும், சுட்டுக் கொல்வதும் அன்றாட நிகழ்வுகள் ஆகி விட்டபோதிலும், அதைத்தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது, அரசு தன் குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிய கண்டனத்துக்குஉரியதாகும் என்று கூறப்பட்டுள்ளது.
மதிமுகவுக்கு மொத்தம் நான்கு எம்.பிக்கள். எல்.கணேசன் (திருச்சி), செஞ்சி ராமச்சந்திரன் (வந்தவாசி), சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் (சிவகாசி),சி.கிருஷ்ணன் (பொள்ளாச்சி). இவர்களில் எல்.ஜியும், செஞ்சியும் மதி.கவிலிருந்து நீக்கப்பட்டு இருவர் அணியாக செயல்பட்டு வருகின்றனர். மற்றஇருவரும் மதி.கவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய மண்டல மாநாட்டை வைகோ கொடியேற்றித் தொடங்கி வைத்தார். மாலை 5 மணிக்கு மாநாட்டுநிகழ்ச்சிகள் தொடங்கின.












Click it and Unblock the Notifications