நெல்லையில் தொடரும் வன்முறை-கோவில் சிலைகள் உடைப்பு
நெல்லை:நெல்லையில் கடந்த சில நாட்களாக இரு பிரிவினருக்குமிடையே நடந்து வரும் மோதல் தொடர்ந்து கொண்டுள்ளது.
நெல்லை தச்சநல்லூரில் 2 பிரிவினருக்குமியையே ஏற்பட்ட மோதலில் கண்ணன், குமார் ஆகியோர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதனால் அந்தபகுதிகளில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
இந்த கொலைகள் தொடர்பாக 9 பேர் தாமகவே போலீசில் சரணடைந்தனர். இந் நிலையில் நேற்று தச்சநல்லூர் பகுதியில் வைக்கோல் படப்புகளுக்குதீ வைக்கப்பட்டதால் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய போலீஸாரும்இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் தாமிரபரணி அருகே பாலசுப்பிரமணி சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீகுமிளி உடையார் சாஸ்தா கோவில் ஆகிய 2 கோவில்களையும் ஒருகும்பல் சூறையாடியது.
நேற்று நள்ளிரவில் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் கதவின் மீது பெரிய பாறாங் கல்லை வீசிய கும்பல் கதவை உடைத்தது. பின்னர் கோவில் மீதுதாக்குதல் நடத்தினர்.
மேலும் ஸ்ரீகுமுளி உடையார் கோவில் கதவையும் பாறாங்கல்லை வீசி உடைத்து அங்குள்ள 2 அடி உயரமுள்ள ஆழ்வார் கற்சிலையையும், அதன்அருகே உள்ள சாஸ்தா சிலையும் உடைத்தது.
கோவில் முன் பீர் பாட்டிலை உடைத்தும், யானை உருவ கற்சிலையை அசிங்கப்படுத்திவிட்டும் சென்றது அக் கும்பல்.
இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications