வங்கதேசத்திடம் இந்தியா கேவல தோல்வி!

Subscribe to Oneindia Tamil

போர்ட் ஆப் ஸ்பெயின்:உலகக் கோப்பைப் போட்டியின் முதல் ஆட்டத்திலேயே, வங்கதேசத்திடம் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் கேவலமான தோல்வியைச்சந்தித்தது.

உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மென்கள் உள்ள அணி, டெண்டுல்கர் என்ற இமயம் உள்ள அணி என்று பல வயிைலும் பெரிய அளவில் ஊதிவிடப்பட்ட இந்திய அணி நேற்று தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை சந்தித்தது.

நம்ம வீரர்கள் வங்கதேச வீரர்களை எளிதில் ஊதித் தள்ளிவிடுவார்கள் என்ற கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில்,அத்தனை பேரின் நம்பிக்கையிலும் நச் சென்று பெரிய அடியாக வைத்து விட்டனர் வங்கதேசத்தின் இளம் வீரர்கள்.

பி பிரிவில் இடம்பெற்றுள்ள இரு அணிகளும் போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் உள்ள குவீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்று சந்தித்தனர்.முதலில் இந்தியா பேட்டிங் செய்தது.

Galngly

ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கு அதிர்ச்சி ரெட் கார்பட் விரித்துக் காத்திருந்தது. பந்துவீச்சில் புலியாக மாறிய வங்கப் புலிகள், இந்தியப் புலிகளை(காகிதப் புலிகள்?) பதம் பார்த்து பயமுறுத்தினர்.

ஒரு பவுண்டரி அடிக்கவே இந்திய வீரர்கள் திணறும் வகையில் அற்புதமான பீல்டிங் வியூகத்தால் இந்தியர்களைத் தடுமாற வைத்து விட்டனர்வங்கதேச வீரர்கள்.

பாயும் புலிகளாக மாறி ஒரு பந்தையும் பவுண்டரிக்குப் போக விடாமல் தடுத்தும், ஒரு ரன், இரண்டு ரன்களை எடுக்கக் கூட முடியாத அளவுக்கு படுடைட்டாக இருந்தது வங்கதேசத்தின் பீல்டிங். அத்தோடு பந்து வீச்சையும் படு நேர்த்தியாக கையாண்ட வங்கதேசத்தினரை சமாளிக்கவே இந்தியவீரர்களுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது.

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஷேவாக் வழக்கம் போல சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். 2 ரன்களை மட்டுமே எடுத்த அவர்மொர்டசா பந்தில் போல்டு ஆனார். இன்னும் எத்தனை நாளைக்கு இவரை இந்திய அணியின் ஸ்பெஷல் வீரர் என்று கேப்டன் டிராவிட் கூறிக்கொண்டிருக்கப் போகிறாரோ தெரியவில்லை!

அனுபவம் வாய்ந்த ஒரு வீரராக தனது ஆட்டத் திறமையை வெளிப்படுத்தத் தவறிய ஷேவாக், ஒட்டு மொத்த இந்தியர்களின் கோப்பைக் கனவைகாலி செய்யும் அளவுக்கு அட்டகாசமான ஃபார்மில் உள்ளதை நேற்றைய போட்டியில் வெளிப்படுத்தினார்.

மறு முனையில், செளரவ் கங்குலி, படு பொறுப்பாக, நிதானமாக பந்துகளை எதிர்கொண்டு ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார். கங்குலி மட்டும்அணியில் இல்லாவிட்டால் இந்திய அணி 100 ரன்களைக் கூட நேற்று சேர்த்திருக்க முடியாது. இவரைப் போய் மென்டலி அண்ட் பிசிக்கலிஅன்ஃபிட் என்று எப்படிக் கூறினார் சேப்பல்?

மிக பொறுப்பாக கங்குலி ஆடிக் கொண்டிருக்க, மறு முனையில் அத்தனை வீரர்களும் வருவதும், கட்டையைப் போடுவதுமாக போய்க்கொண்டிருந்தனர். ஏதோ ரஞ்சி கோப்பைப் போட்டி போல நினைத்துக் கொண்டு, கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லாமல் இந்திய வீரர்கள்விளையாடியதைப் பார்த்து இந்திய ரசிகர்களின் வயிறு எரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பேட்டிங் லிஜென்ட் சச்சின் டெண்டுல்கர் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் திணறியதைப் பார்த்து இந்தியர்களுக்குப் பகீர் என்றிருக்கும்.தட்டுத் தடுமாறிய சச்சின் எடுத்த 7 ரன்கள் போதும் என்று ரஸ்ஸாக் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஷேவாக் வெளியேறிய பின்னர் வந்த ராபின் உத்தப்பா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படும் ராகுல்டிராவிட் கொஞ்ச நேரம் சமாளித்துப் பார்த்தார். இருப்பினும் அவரால் 14 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

இப்படி முன்னணி வீரர்கள் வெளியேறி விட்ட நிலையில் கங்குலி தலை மீது ரன் குவிக்கும் பொறுப்பு விழுந்தது. அவரும் பொறுமையாக ஆடிரன்களை சேர்த்தார். அவருக்கு துணையாக வந்து சேர்ந்தார் யுவராஜ் சிங். இவர்தான் கங்குலியின் வேகத்திற்குப் பொருத்தமாக, பொறுப்பானஆட்டத்தைக் கொடுத்தார்.


இருவரும் இணைந்து சற்றே ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். சிறப்பாக ஆடி வந்த கங்குலி 66 ரன்களில் ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங் 47ரன்களைச் சேர்த்தார்.

பிறகு வந்த வீரர்களில் டோணி, ஹர்பஜன் சிங், அஜீத் அகர்கர் ஆகியோர் மட்டைகளை வீசி ரன்களை சேர்ப்பதற்குப் பதில் முட்டையை வாங்கிக்கொண்டு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இறுதியாக இறங்கிய ஜாகிர் கான் கொஞ்சம் போல வீரத்தைக் காட்டி 15 ரன்களைச் சேர்த்தார்.

இறுதியில் 50 ஓவர்களைக் கூட முடிக்க முடியாமல், 49.3 ஓவர்களிலேயே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் எடுத்துபடு கேவலமான தனது இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.

வங்கதேச இளம் வீரர் மொர்டஸா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஸ்ஸாக், ரபீக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை தட்டிச்சென்றனர்.

192 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் வங்கதேசம் தனது ஆட்டத்தைத் தொடங்கியது. அனுபவம் வாய்ந்த வீரர்களைப் போல இந்திய பந்துவீச்சைமிக அழகாக எதிர்கொண்டது வங்கதேசம்.

இக்கட்டான நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று இந்திய வீரர்களுக்குக் கற்றுக் கொடுப்பதைப் போல படு நேர்த்திய ஆடினர் வங்கதேசவீரர்கள்.

தொடக்க ஆட்டக்காரான ஷகாரியார் நபீஸ் 2 ரன்களில் வீழ்ந்தாலும் கூட இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான தமீம் இக்பால் (இவருக்கு 19வயசுதான்!) படு சிறப்பாக ஆடி அரை சதம் போட்டார். 51 ரன்களை எடுத்தார் தமீம்.

பிறகு வந்த முஷீபுர் ரகீம் சிறப்பாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 56 ரன்களைக் குவித்தார். அதேபால சகிபூல் ஹசனும் அபாரமாக ஆடி 53ரன்களைச் சேர்த்து இந்தியாவுக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்தார்.

இறுதியில், 48.3 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 192 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது வங்கதேசம்.

இந்தியத் தரப்பில், முனாப் படேல், ஷேவாக் தலா 2 விக்கெட்டுகளையும், ஜாகிர்கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

உலகின் தலை சிறந்த பேட்ஸ்மென்களைக் கொண்டதாக கூறப்படும் இந்திய அணியால் 50 ஓவர்களைக் கூட முடிக்க முடியாமல் சுருண்டது இந்தியரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதல் போட்டியிலேயே சாதாரண அணியான வங்கதேசத்திடம் இந்திய வீரர்கள் திணறிப் போனது இந்திய அணியின் கோப்பைக் கனவைகேள்விக்குறியாக்கி விட்டது.

வங்கதேச அணிக்கு உலகக் காப்பையில் இது 3வது வெற்றி. கடந்த 1999ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும்ஸ்காட்லாந்து அணியை அவர்கள் வீழ்த்தியிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அடுத்து இலங்கை மற்றும் பெர்முடாஅணிகளை வங்கதேசம் சந்திக்கவுள்ளது. இதில் பெர்முடாவை வங்கதேசம் எளிதில் வீழ்த்தி விடும். இந்தியாவைப் போல, இலங்கையைவீழ்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதேசமயம், இந்தியாவுக்குத்தான் மிகப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் இரு போட்டிகளையும் (இலங்கை, பெர்முடா) இந்தியாமிகப் பெரும் ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அப்படி நடந்தால்தான் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளமுடியும்.

நேற்றைய போட்டியில் வங்கதேசத்தின் ஆட்ட நேர்த்தியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பந்து வீச்சு, பீல்டிங், பேட்டிங் என அத்தனைதுறைகளிலும் இந்தியாவை ஊதித் தள்ளி விட்டார்கள்.

இந்தியப் பந்து வீச்சைக் கண்டு அவர்கள் பயப்பட்டதாகவே தெரியவில்லை. அதேபோல இந்தியாவுக்கு பந்து வீசும்போதும் கொஞ்சம் கூடபயப்படாமல், மிக நேர்த்தியாக, பந்து வீசினர். அவர்களின் ஒரே இலக்கு வெற்றியாக மட்டுமே இருந்தது. எந்தத் தவறும் இல்லாத அவர்களின்ஆட்டத்திற்கு நேற்றைய ஆட்டத்தில் கிடைத்த வெற்றி மிகவும் பொருத்தமானதாகும்.

வங்கதேசத்தில் உற்சாகம்:தங்களது அணிய வலிமை வாய்ந்த இந்தியாவை வீழ்த்தியதை வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடினர். டிவி மூலம்வெற்றியைப் பார்த்த அவர்கள் தெருக்களில் கூடி ஆடிப் பாடி கொண்டாடினர்.

ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் மூழ்கி தலைநகர் டாக்கா தத்தளித்தது. பட்டாசுகள் சரமாரியாக வெடிக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+