ஊட்டி: விஷ்ணுவர்த்தன் படப்பிடிப்பு நிறுத்தம்-பெங்களூர் தமிழ் பட தியேட்டரில் பெரும் ரகளை

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:ஊட்டியில் நடந்த கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன் நடிக்கும் மாத்தாடு மாத்தாடு மல்லிகே படத்தின் ஷூட்டிங்கில் திமுகவினர் குறுக்கிட்டுபடப்பிடிப்பை நிறுத்தினர். சிறிது நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து நடந்தது. இதன் எதிரொலியாகபெங்களூரில் மொழி படம் திரையிடப்பட்ட தியேட்டரில் புகுந்த கன்னடர்கள் ரகளை செய்தனர்.

பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன். சமீபத்தில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து பெங்களூரில் திரையுலகினர் நடத்திய பேரணிக்குத்தலைமை தாங்கியவர் விஷ்ணுவர்த்தன்.

DMK cadres protest against in Vishnuvardhan Shooting spot

நடுநிலையானவர் என்று கருதப்படும் விஷ்ணுவர்த்தன், கன்னட திரையுலகினர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டது பெரும் வியப்பை அளித்தது.

இந்த நிலையில், விஷ்ணுவர்த்தன் மாத்தாடு மாத்தாடு மல்லிகே என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகிறது.வெள்ளிக்கிழமை காலை அங்குள்ள தாவரவியல் பூங்கா பகுதியில் ஒரு பாடலைப் படமாக்கினர். இப்படத்தில் விஷ்ணுவர்த்தனுக்கு ஜோடியாகசுஹாசினி நடிக்கிறார்.

பாடலுக்காக படப்பிடிப்புக் குழுவினர் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பெரும் திரளான திமுகவினர் வந்தனர். விஷ்ணுவர்த்தனைசந்தித்த அவர்கள், கர்நாடகத்தில் தமிழ்ப் படங்களுக்கு அனுமதி கொடுக்கப்படுவதில்லை, தியேட்டர்களில் தமிழ்ப் படங்களை தடுத்துநிறுத்துகிறார்கள், ரகளையில் ஈடுபடுகிறார்கள்.

Vishnuvardhan and Suhasini in Shooting spot

இந்த நிலையில் இங்கு கன்னடப் படத்தின் ஷூட்டிங் நடத்தப்படுவது சரியல்ல, இது தமிழர்களின் உணர்வுகளை இழிவுபடுத்துவதாக இல்லை.பெங்களூரிலும், கர்நாடகத்திலும் தமிழ் சினிமாவுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும்போதுதான் இங்கும் கன்னடப் படப்பிடிப்புக்கு சாதகமானநிலை உருவாக முடியும். எனவே படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர்.

இதைக் கேட்ட விஷ்ணுவர்த்தன் அவர்களிடம் சிறிது நேரம் பேசிப் பார்த்தார். இருப்பினும் திமுகவினர் தங்களது நோக்கத்தில் உறுதியாகஇருந்ததால் படப்பிடிப்பிலிருந்து கிளம்பிச் சென்றார் விஷ்ணுவர்த்தன். படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இருப்பினும் மாலை 4 மணிக்கு மேல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விஷ்ணுவர்த்தன் படப்பிடிப்பு நடந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பு நடந்தகோல்ப் கிளப் மைதானத்திற்கு நேற்று காலை பாமகவைச் சேர்ந்த சிலர் அங்கு வந்தனர்.

போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்திற்குச் சாதகமாக பேசியுள்ளார் விஷ்ணுவர்த்தன்.எனவே அவரிடம் எங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

ஆனால் அதை போலீஸார் ஏற்க மறுத்தனர். இதையடுத்து பாமகவினர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். கன்னடப் படப்பிடிப்பை அனுமதிக்கமுடியாது என்று கூறி கோஷமிட்டனர்.

இதையடுத்து அவர்களை அங்கிருந்து வேன் மூலம் ஏற்றி அப்புறப்படுத்தினர் போலீஸார். தொடர்ந்து படப்பிடிப்பு தங்கு தடையின்றி நடந்துவருகிறது.

பின்னர் விஷ்ணுவர்த்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கலைக்கும், காவிரிப் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் கலைஞர்கள்.எங்களுக்கு மொழி, இனப் பாகுபாடு கிடையாது. மக்களை மகிழ்க்கிறவர்கள் நாங்கள்.

படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட செய்தியை அறிந்து நடிகர்கள் சரத்குமார், விஜயகாந்த், பிரபு ஆகியோர் என்னிடம் பேசினர். படப்பிடிப்புதடையில்லாமல் நடக்க ஆவண செய்வதாக கூறி அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த வேண்டும். அப்போதுதான் கன்னடத் திரையுலகினருக்கும், கர்நாடக மக்களுக்கும் தமிழக மக்களின் அன்பும்,ஒத்துழைப்பும் புரியும், அதற்கு நீங்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

எங்களுக்கு காவல்துறையும் பூரண ஒத்துழைப்பு தருகிறது. அதை விட முக்கியமாக ஊட்டி மக்கள் எங்களுக்கு முழு ஆதரவாக, அன்போடு நடந்துகொள்கின்றனர். அவர்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இங்கு நாங்கள் இருக்க முடியாது.

இங்கு நான் மிக பாதுகாப்பாக உள்ளேன், எந்தப் பிரச்சினயும் எங்களுக்கு இல்லை. தமிழக மக்களின் இந்த அன்புக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்றார் விஷ்ணுவர்த்தன்.

பெங்களூரில் பெரும் வன்முறை:

தமிழகத்தில் இப்படி கன்னடப் படப்பிடிப்பு படு பாதுகாப்பாக, பிரச்சினை இல்லாமல் நடந்து வரும் நிலையில் தொடர்ந்து பெங்களூரில் தமிழ்ப்படங்களைத் திரையிடும் தியேட்டர்களில் ரகளை நடந்து கொண்டுதான் உள்ளது.

மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள சம்பிகே என்ற தியேட்டரில் பிரகாஷ் ராஜ் தயாரித்து வெளியிட்டுள்ள மொழி படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தத்தியேட்டருக்கு நேற்று பகல் காட்சி நடந்து கொண்டிருந்தது.

அப்போது கன்னட ரக்ஷன வேதிகே என்ற கன்னட அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். பட போஸ்டர்கள் மீதுசாணி எறிந்து அசிங்கப்படுத்தினர். கட் அவுட்டுகளையும் அடித்து நொறுக்கினர்.

படத்தை நிறுத்துமாறு கூறி போராட்டத்தில் குதித்தனர். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர்தியேட்டர் ஆபரேட்டர் அறைக்குள் புகுந்த அவர்கள், அங்கிருந்த படச்சுருளை எடுத்துக் கொண்டு ஓட முயன்றனர்.

அப்போது விரைந்து வந்த போலீஸார் அந்தக் கும்பலிடமிருந்து படப்பெட்டியை மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 25 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+